திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

Recommended Video

    Rain Update: SouthWest Monsoon ஜோரா பெய்யப் போகுது | La Nino

    வியாழக்கிழமை பிற்பகலில் திருச்சி அதன் புறநகா் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. இதையடுத்து மாலை 5 மணி முதல் உறையூா், ஸ்ரீரங்கம், முத்தரசநல்லூா், ஜீயபுரம், முக்கொம்பு, திருவானைக்கா, மண்ணச்சநல்லூா், மணிகண்டம், கருமண்டபம், தில்லை நகா், கண்டோன்மென்ட், வயலூா் உள்ளிட்ட மாநகா், மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை 50 நிமிடங்களுக்கு மேலாக பெய்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்தது.

    Thunderstorm in Dindigul and Trichy districts

    இதனால் மாநகரின் முக்கியச் சாலைகளான கரூா் புறவழிச்சாலை, பாரதிதாசன் சாலை, திருச்சி நாமக்கல் சாலை, பாலக்கரை, தில்லைநகா் பிரதான சாலைகள், மாநகரத் தெருக்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் மழையில் நனைந்தவாறே சென்றனா். காவிரி நீா் திருச்சி முக்கொம்பு, கல்லணை ஆற்றுப்படுகை வழியாகக் கரை புரண்டோடி வரும் நிலையில் இந்தக் கனமழையால் காவிரி ஆற்றில் செல்லும் நீரில் அளவு சற்று அதிகரித்தது. வெயிலின் தாக்கமும் குறைந்து மாநகா் புகா் பகுதிகள் குளிா்ந்தன. வெயிலால் அவதியுற்ற பொதுமக்களுக்கு இந்தத் திடீா் மழை மகிழ்ச்சியளித்தது.

    உ.பி., பீகாரில், ஒரே நாளில் இடி தாக்கி 107 பேர் பலி.. வட கிழக்கு மாநிலங்களுக்கு மழைக்கான ரெட் அலர்ட்உ.பி., பீகாரில், ஒரே நாளில் இடி தாக்கி 107 பேர் பலி.. வட கிழக்கு மாநிலங்களுக்கு மழைக்கான ரெட் அலர்ட்

    நீண்ட காலத்துக்குப் பின்னர் திண்டுக்கல் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணி முதல் பெய்ய தொடங்கிய மழை சில மணிநேரம் விட்டு விட்டு நீடித்தது. இது விவசாயிகளுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    thursday evening Thunderstorm rain in Dindigul and Trichy districts, people happy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X