திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திராவிட சிங்கங்கள் கூட்டத்தில் ஆட்டு குட்டியை பற்றி பேசுவதா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொளேர் அட்டாக்

Google Oneindia Tamil News

திருச்சி: திராவிட சிங்கங்கள் கூடும் கூட்டத்தில் ஆட்டு குட்டியை (தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை) பற்றி பேச வேண்டாம் என தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாடினார்.

Recommended Video

    திராவிட சிங்கங்கள் கூடும் கூட்டத்தில் ஆட்டு குட்டியை பற்றி பேச வேண்டாம் - அன்பில் மகேஷ்

    தி.மு.க அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணாசிலை அருகே நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் மற்றும் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் 4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்

    முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தற்போது நாம் பல்வேறு திட்டப்பணிகளை செய்வோம் என கூறினால் அதிமுகவினர் நம்மை பார்த்து புரூடா விடுகிறார்கள் என்கிறார்கள். திருச்சியில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்கள், மேம்பாலங்கள், கல்லூரிகள் எல்லாம் கருணாநிதி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டன. கருணாநிதியும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். ஸ்டாலினும் அவ்வாறு செயல்பட்டு வருகிறார்.

    மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பு

    மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பு

    ஸ்டாலின் ஆட்சியில் தான் மும்மாரி மழை பெய்து வருகிறது. சித்திரை மாதத்திலேயே மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து நீர் வழக்கமாக திறக்கும் ஜூன் 12ம் தேதிக்கு முன்பே தண்ணீர் திறக்கும் நிலை தற்போது உள்ளது. நல்ல தலைவர் ஆட்சி செய்வதால் தான் இவ்வாறெல்லாம் நடக்கிறது. ஆளுநரை கண்டால் தி.மு.க வினர் அச்சப்படுகிறார்கள் என கூறினார்கள் . ஆனால் உச்சநீதிமன்றமே ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் என கூறி இருக்கிறது. நினைத்ததையெல்லாம் சாதிக்கும் முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு பேசினார்.

    ஆட்டு குட்டி பேச கூடாது

    ஆட்டு குட்டி பேச கூடாது

    இக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: அனைத்து தோழர்களுக்கும் என்னுடைய அன்பான வேண்டுகோள்- இனி எங்கு பேசினாலும் திராவிட சிங்கங்கள் கூடுகின்ற கூட்டத்தில் ஆட்டுக் குட்டியை பற்றி பேச வேண்டாம். நாம் செல்ல வேண்டிய பயணம் வெகுதொலைவில் இருக்கின்றது. முதலமைச்சர் பயணம் வேகமாக இருக்கின்றது. இல்லம் தேடி கல்வி, மக்கள் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளை அறிவித்த, பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்த, கருணாநிதி பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி.

    திராவிட மாடல் ஆட்சி

    திராவிட மாடல் ஆட்சி

    5 லட்சம் கோடி கடனில் இருந்த சூழலில் ஆட்சிக்கு வந்தாலும் கொரோனா காலகட்டத்தில் ரூ.4000 மக்களுக்கு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி. இந்த அரசாங்கமே பெண்களுக்கானது தான். திராவிட மாடல் என்றால் சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி, சுயாட்சி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை. இந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ஆட்சி செய்கிறார்.

    டெல்லி பயணம்

    டெல்லி பயணம்

    ஏப்ரல் மாதம் டெல்லிக்கு சென்றிருந்த போது அங்குள்ள பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து டெல்லி முதலமைச்சரும், டெல்லி பள்ளி கல்வி துறை அமைச்சரும் விளக்கினார்கள். அப்போது தமிழ்நாட்டின் கல்வி துறை செயல்பாடுகள் குறித்து நம் முதலமைச்சர் என்னிடம் அவர்களிடம் விளக்கி கூற சொன்னார். நான் சொன்ன போது இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து மிகுந்த ஆச்சர்யமாக பார்த்து பாராட்டினார்கள். இது நம் ஆட்சியின் ஒரு படி சோறுக்கு ஒரு சோறு பதம் போல தான். இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

    English summary
    Tamilnadu Minister Anbil Mahesh Poyyamozhi has slammed BJP's Annamalai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X