திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராத்திரி நேரம்.. பஸ் ஸ்டாண்ட்டில் 2 திருநங்கைகள்.. சிக்கி திணறிய தொழிலதிபர்.. தூக்கிய போலீஸ்!

திருச்சியில் வழிப்பறி செய்த 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

திருச்சி: பஸ் ஸ்டாண்டில் 2 திருநங்கைகள் உதவி என்று கேட்டுள்ளனர்.. ஐயோ பாவம் என்று உதவ போன தொழிலதிபர் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டார். இந்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரகுமான்.. இவர் ஒரு கட்டிட கலை நிபுணர்.. வேலை விஷயமாக சத்தியமங்கலம் வரை சென்றிருந்தார்.. பிறகு பணிகளை முடித்து நாமக்கல் வழியே நேற்றிரவு தன்னுடைய ஊருக்கு திரும்பிகொண்டிருந்தார்.

 transgenders: two transgenders arrested for robbery

நாமக்கல் அருகே கார் வந்துகொண்டிருந்தபோது 2 பேர் வழிமறித்துள்ளனர்.. அதனால் காரை நிறுத்திவிட்டு ரகுமான் இறங்கினார்.. அவர்கள் இருவரும் திருநங்கைகள் என்பது பிறகுதான் தெரிந்தது.. நைட் நேரம், பஸ் எதுவும் போகவில்லை, தங்களுக்கு லிப்ட் தருவீர்களா என்று கெஞ்சியபடியே அவர்கள் உதவி கேட்டனர்.

பிறகு உடனே ரகுமானின் பேண்ட், சட்டைகளில் கையை விட்டு, பணத்தை அத்துமீறி எடுத்தனர்.. மோதிரம், உட்பட நகைகளையும் பறித்து கொண்டதாக தெரிகிறது. அப்போதுதான் விபரீதத்தை உணர்ந்தார் ரகுமான். அவர்களிடம் இருந்து தப்பித்த ரகுமான், உடனடியாக காரை ஓட்டி சென்று, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்.

மம்மி.. மம்மி.. "உன்னோடது" ஏன் அப்பா கார்ல இருக்க.. மகளின் கேள்வி... ஆடிப்போன அப்பா.. குழம்பிய அம்மா!

அந்த புகாரின் பேரில், நாமக்கல் பஸ் ஸ்டாண்டு பகுதிக்கு போலீசாரும் விரைந்து வந்தனர்.. அந்த 2 திருநங்கைகளும் அங்குதான் நின்று கொண்டிருநத்னர்.. அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.. நாமக்கல் கொழந்தான் தெருவை சேர்ந்த அர்ச்சனா, சேலம் ஓமலூரைச் சேர்ந்த ரேகா என்பது அவர்கள் பெயர்கள், இப்படி திருடி, வழிப்பறி செய்வதுதான் அவர்கள் தொழிலாம். 2 பேரும் இப்போது ஜெயிலில் உள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளில் எத்தனையோ திருநங்கைகள், சமூகத்தில் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். கடினமாக உழைக்கிறார்கள், முயன்று படிக்கிறார்கள், தங்களை இந்த சமூகத்தில் போராடி நிலைநிறுத்தி வருகிறார்கள். இருந்தாலும், இது எல்லாவற்றையும் இழிவுபடுத்துவது போல ஒரு சிலர் இப்படிப்பட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவது சங்கடத்தையும், கவலையையும் நமக்கு தருகிறது.

English summary
transgenders: two transgenders arrested for robbery
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X