திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருமணத்தை மீறிய உறவு! 30 ஆபாச வீடியோ! கல்லூரி துணை முதல்வர் கடத்தலில் சிக்கிய திமுக பிரமுகர்!

திருச்சியில் தனியார் கல்லூரி துணை முதல்வரை கடத்தி பணம் பறித்த வழக்கில் திமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

திருச்சி : கல்லூரி துணை முதல்வர் கடத்தல் வழக்கில் புதிய திருப்பமாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திமுக நிர்வாகி என்று தெரியவந்துள்ளது. திருமணத்தை மீறிய உறவே இந்த கடத்தலுக்கு காரணம் என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி கருமண்டபம் வசந்த் நகர் மாரியம்மன் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் விமல் ஆதித்யன். இவர் தனியார் கல்லுாரி பேராசிரியராக பணியாற்றி வந்தார். திருமணமாகி மனைவி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த விமல் ஆதித்தன், நடவடிக்கை சரியில்லாமல் போனது. ஒழுங்கீன செயல் காரணமாக அவரை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

Trichy: 3 arrested for kidnapping a deputy principal of a college

இதனையடுத்து பிராட்டியூர் அருகே மற்றொரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகவும் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார் விமல் ஆதித்தன்.

தான் முதலில் பணியாற்றிய கல்லூரியில் அவருடன் பணியாற்றி வந்த நிவேதிதா என்ற பெண்ணுடன் விமல் ஆதித்தனுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. நிவேதிதாவிற்கு, பேராசிரியர் விமல் ஆதித்தனே வரன் தேடி வந்துள்ளார். துறையூரை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் நிவேதிதாவை திருமணம் செய்து வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னரும் நிவேதிதா உடன் விமல் ஆதித்தன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இவர்களின் தொடர்பு கணவர் சசிகுமாருக்கு தொிய வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் சசிகுமார் தன்னுடன் சிலரை சேர்த்து கொண்டு தற்போது துணை முதல்வராக பணியாற்றும் விமல் ஆதித்தனை கடத்தி சென்று தனக்கான திருமண செலவு ரூபாய் 15 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார்.

அதைத்தொடர்ந்து ரூ.2 லட்சம் ரூபாயை மிரட்டலுக்கு பயந்து விமல் ஆதித்தன் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனாலும் இது போதாது இன்னும் வேண்டும் என்று கேட்டு விமல் ஆதித்தனை அடித்து துன்புறுத்தி உள்ளனர். மேலும் விமல் ஆதித்தனின் மனைவியிடமும் வீட்டிற்கு சென்று மிரட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

எப்படியும் தன் கணவருக்கு வந்த பிரச்சினை தீர வேண்டும் என்று விமலின் மனைவி, மேலும் ரூ.40 ஆயிரம் மற்றும் சொத்து பத்திரங்களை கொண்டு சென்று சசிகுமாரிடம் கொடுத்து கணவரை மீட்டுள்ளார். அப்போது அந்த ஆவணத்துடன் விமல் ஆதித்தன் நிவேதா தொடர்புடைய சில ஆபாச வீடியோக்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் விமல் ஆதித்தன் தன்னை கடத்தி சென்று சிலர் பணம் பறித்ததாக புகார் கொடுத்தார். அதன் பேரில் ஆய்வாளர் (பொறுப்பு) கோசலைராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடத்தல் வழக்கு தொடர்பாக துறையூரை சேர்ந்த சசிகுமார். திருச்சி மிளகுபாறையை சேர்ந்த பிரசாந்த், லாசர் ஆரோக்கியராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள் -

துணை முதல்வரான பேராசிரியர் கடத்தல் வழக்கில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது, அதாவது, கடத்தல் புகார் கொடுத்த விமல் ஆதித்தன், தன்னுடன் பழகிய பெண்ணுடன் நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வீடியோக்கள்தான் தற்போது காவல் துறையினர் கையில் சிக்கி உள்ளதாகவும், காவல்துறையினரும் இந்த வழக்கு தொடர்பாக முறையாக பதில் அளிக்கவும் தயக்கம் காட்டி வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

விமல் ஆதித்தனால் வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கைதான லாசர் ஆரோக்கியராஜ், மிளகுபாறை பகுதி திமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Three persons, including a DMK official, have been arrested in a case of kidnapping and extorting money from a private college deputy principal in Trichy. Police are looking for 3 more people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X