திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தந்தை இறந்ததால் டிசி கேட்ட மாணவன்.. ரூ 8 லட்சம் செலுத்திவிட்டு வாங்கிகோ என கறார் காட்டும் கல்லூரி

Google Oneindia Tamil News

திருச்சி: தந்தை இறந்ததால் வேளாண்மை படிப்பைத் தொடர முடியவில்லை. எனவே மாற்றுச் சான்றிதழ் எனப்படும் டிசி கொடுங்கள் என மாணவர் கெஞ்சியும், கல்லூரி நிர்வாகமோ ரூ 8 லட்சம் கொடுத்தால் டிசி தருகிறேன் என கறாராக கூறிவிட்டதாக குடும்பத்தினர் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்கள்.

Recommended Video

    டிசி கொடுங்க என கெஞ்சும் மாணவர்.. ரூ. 8 லட்சம் கேட்கும் தனியார் வேளாண்மைக் கல்லூரி - வீடியோ

    தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிரகாரம் வட்டம், அக்கநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நவநீத கோபாலகிருஸ்ணன் மகன் சூரியபிரகாஷ் (18). இவர் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்தவர்.

    விவசாய கூலித் தொழிலாளியான நவநீதிகிருஷ்ணன் தனது மகன் சூரியபிரகாஷை திருச்சி சிறுகனூர் பகுதியில் உள்ள நாளந்தா வேளாண்மை கல்லூரியில் 2018 - 19-ஆம் ஆண்டில் பிஎஸ்சி அக்ரி ஹான்ஸ் முதலாம் ஆண்டு சேர்த்தார்.

    வட்டிக்கு வட்டி.. காமத் குழு பரிந்துரை என்னாச்சு? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி வட்டிக்கு வட்டி.. காமத் குழு பரிந்துரை என்னாச்சு? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

    சூரிய பிரகாஷ்

    சூரிய பிரகாஷ்

    அப்போது ரூ.1லட்சத்து 85 ஆயிரம் செலுத்தி அதே கல்லூரியில் விடுதியில் தங்கி கல்வி பயின்றார். அப்போது கல்லூரி நிர்வாகம் பட்டியல் இன மாணவர் என்பதால் அரசு உதவித் தொகையிலேயே கல்வி பயிலலாம் எனக் கூறியுள்ளனர். முதலாம் ஆண்டு கல்வி பயின்ற மாணவன் சூரியபிரகாஷ் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் போது, மீண்டும் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் பணம் கட்ட வற்புறுத்தியுள்ளனர் கல்லூரி நிர்வாகத்தினர்.

    மனஉளைச்சல்

    மனஉளைச்சல்

    கொரோனா பரவல் காரணமாக போதிய வருவாய் இல்லாத நிலையில் மன உளைச்சலான மாணவனின் தந்தை மாரடைப்பால் அண்மையில் உயிரிழந்தார். தந்தை உயிரிழந்ததால் படிப்பைத் தொடர முடியாத நிலையில் மாணவனும், அவனது தாய் ராமஜெயந்தியும், கல்லூரிக்கு வந்து குடும்ப சூழ்நிலையினை கூறி மாற்றுச் சான்றிதழ் கொடுத்தால், தூத்துக்குடி பகுதியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்று கொள்ளலாம் என கேட்டுள்ளனர்.

    மண்ணெண்ணெய்

    மண்ணெண்ணெய்

    ஆனால் கல்லூரி நிர்வாகம் மூன்றாண்டுக்கும் செலுத்த வேண்டிய ரூ.8 லட்சத்தை செலுத்தினால்தான் மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியும் என கூறினர். இதுகுறித்து சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந் நிலையில் தனது மகனுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுக்க மறுத்ததால் கல்லூரி நுழைவு வாயிலிலேயே , தானும் தனது மகனும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு சாவதை தவிர வேறு வழியில்லை என்றார் மாணவனின் தாய் ராமஜெயந்தி.

    மின்சார வசதி

    மின்சார வசதி

    இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, மேனேஜ்மென்ட் கோட்டாவில்தான் மாணவன் சூரியபிரகாஷ் சேர்ந்தார். கல்லூரிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 8 லட்சம் செலுத்தினால் அவரது மாற்றுச்சான்றிதழை செலுத்த தயாராக உள்ளோம் என்றனர். கடந்தாண்டு இக்கல்லூரியில் போதிய மின்சார வசதி இல்லை, குடிநீர் மற்றும் கழிவறை இல்லை.

    தேவையான தோட்டம்

    தேவையான தோட்டம்

    முறையான ஆசிரியர்கள் , செய்முறைக்கு தேவையான விவசாய பண்ணைத் தோட்டங்கள் இல்லாததால், கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதலாண்டு மாணவன் மனோஜ்குமார் உள்ளிட்ட 3 மாணவர்கள், 2 மாணவிகள் இக் கல்லூரியில் படிக்க விருப்பமின்றி தலா ரூ 1 லட்சம் கல்லூரிக்கு செலுத்தி விட்டு மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Agriculture college in Trichy not ready to give TC and demands to pay Rs 8 lakhs for the student who wants to leave the college as he couldnt pay the fees after his father demise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X