திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.50 ஆயிரம் லஞ்சம்... திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கைது

Google Oneindia Tamil News

திருச்சி: லஞ்ச புகார் தொடர்பாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் அருள் அமரன் கைது செய்யப்பட்டார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் அருள்ஜோதி, சக்திவேல் உள்பட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 10 பேர் சோதனை நடத்தினர்.

Trichy Assistant Commissioner Arul amaran Arrested over rs 50,000 bribe Complaint

திருச்சி கோர்ட்டு அருகே ஹீபர் சாலையில் உள்ள உதவி கமிஷனர் அருள்அமரன் (50) அலுவலகத்தில் நேற்றிரவு சோதனை நடந்தது. இடப் பிரச்னையை தீர்த்து வைப்பதற்கு திருச்சியை சேர்ந்த சீதாராமனிடம், உதவி கமிஷனர் அருள் அமரன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சீதாராமன், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சீதாராமன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து, உதவி கமிஷனர் அருள் அமரனிடம் லஞ்சப் பணத்தை சீதாராமன் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அருள் அமரனை கையும், களவுமாக கைது செய்தனர்.

கிராப்பட்டியில் உள்ள, உதவி கமிஷனர் அருள்ஜோதியின் வீட்டிலும் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். லஞ்சம் பெற்றதாக உதவி கமிஷனர் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Tiruchi Municipal Criminal Assistant Commissioner Arul Amaran was arrested on bribe complaint.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X