திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

40 நிர்வாண வீடியோ.. மணப்பாறையை அலற விட்ட ஜெயக்குமார் எங்கே... திருச்சி போலீசாருக்கு வழக்கு மாற்றம்

வங்கி ஊழியர் ஜெயக்குமாரை தேடும் பணி நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

திருச்சி: 40 நிர்வாண வீடியோக்கள்.. ஏகப்பட்ட ஆபாச மெசேஜ்கள்.. என பெண்களை மிரட்டி சீரழித்த காம கொடூரன் எட்வின் ஜெயக்குமாரை தேடும் பணி தீவிரமாகி உள்ளது. கட்டின மனைவியை கொடுமை செய்த இந்த வங்கி அதிகாரியின் வழக்கை திருச்சி போலீசாருக்கு மாற்றம் செய்து தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எட்வின் குறித்த பல தகவல்கள் விரைவில் அம்பலமாகும் என்றும், தலைமறைவான எட்வின் கூடிய சீக்கிரம் கைது செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்... வயது 36 ஆகிறது.. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இந்தியன் பேங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.. கடந்த டிசம்பர் 2ம் தேதிதான் தஞ்சையை சேர்ந்த தாட்சர் என்பவருடன் கல்யாணம் ஆகி உள்ளது.

trichy bank staff jayakumar case issue

ஆனால் முதலிரவில் மனைவியை பிரிந்து தனி ரூமுக்கு சென்றுவிட்டாராம்.. தாட்சருக்கு எதுவுமே புரியாமல் பார்த்தபோதுதான், ரூமில் எட்வின் செல்போனில் யாரிடமோ விடிய விடிய ஆபாசமாக பேசி கொண்டிருந்திருக்கிறார்.

மறுநாளும் இப்படியேதான் இருந்துள்ளார்... மனைவியிடம் நெருங்காமலும் தவிர்க்கவும்தான் தாட்சருக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால் எட்வின் ஒருநாள் வேலைக்கு போனதுமே, அந்த தனி அறையை தாட்சர் சோதனை செய்துள்ளார்... மொத்தம் 15 செல்போன்களை வைத்துள்ளார் எட்வின்.. அதில் எல்லாமே ஆபாச வீடியோக்கள். அதில் 400க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.

மேலும் வேறு வேறு பெண்களுடன் எட்வின் நெருக்கமாக இருந்துள்ளார். பெரும்பாலும் நிர்வாண போட்டோக்கள்.. இவர்களில் பலர் வங்கி கஸ்டமர்கள் என்று கூறப்படுகிறது. ஜாலியாக இருக்கும்படி கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் எஸ்எம்எஸ்-களும் அந்த செல்போன்களில் இருந்துள்ளன.. தான் பாத்ரூமில் நிர்வாணமாக நின்றுகொண்டே குளிக்கும் வீடியோ, அதே நிலையில் நின்றுகொண்டே பெண்களிடம் பேசும் வீடியோகால் போன்றவையும் செல்போன்களில் பதிவாகி இருந்தது..

இதை பார்த்து பதறிபோய் மாமியார் மற்றும் குடும்பத்தினரிடம் தாட்சர் சொல்ல, அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையாம். விஷயம் எல்லாவற்றையும் மனைவி தெரிந்துகொண்டு விட்டதால், அவரை கோயிலுக்கு கூட்டி செல்வது போல 2 முறை கொல்லவும் முயற்சித்துள்ளார். இதற்கு பிறகுதான் தாட்சர் வல்லம் மகளிர் போலீசில் புகார் தந்துள்ளார்.. பிறகு தஞ்சை சரக டிஐஜி-யிடம் புகார் தந்தார்.... எட்வின் உட்பட அவரது குடும்பத்தார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

"அக்கா.. அக்கான்னு கூப்பிட்டு".. 16 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளகாதல்.. திமுக பிரமுகர் மனைவி பகீர்!

இந்த விஷயத்தை முன்னாடியே தெரிந்து கொண்ட எட்விட் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் வாங்கி கொண்டார்.. ஆனால் தாட்சர், செல்போனில் இருந்த அத்தனை ஆபாச, அந்தரங்க வீடியோ, போட்டோக்களை கோர்ட்டில் சமர்ப்பித்துவிட்டார்.. பின்னர், ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளை பதிவு செய்து உடனடியாக எட்வின் உள்ளிட்டோரை கைது செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. தலைமறைவாக உள்ள எட்வினை போலீசார் தேடி வருகிறார்கள்.

தங்களை கைது செய்ய தேடுவதை அறிந்ததும் எட்வின் ஜெயக் குமார் உள்ளிட்ட 5 பேருமே எஸ்கேப் ஆகிவிட்டனர்...இந்நிலையில், ஜெயக்குமார் திருச்சியில் பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.. திருச்சியில் எங்கு உள்ளார் என தெரியாததால், அவருடைய மொத்த சொந்தக்காரர்களின் வீடுகளிலும் தேடி வருகிறர்கள். ஸ்ரீரங்கம், சமயபுரம், மணப்பாறையிலும் தேடுதல் வேட்டை நடக்கிறது.

எட்வின் வீடு மணப்பாறை பஸ் ஸ்டேண்ட் அருகில் உள்ளது.. மேலும் தாட்சருடன் கல்யாணம் ஆனது முதலே இந்த வீட்டில்தான் எட்வின் வாழ்ந்து வந்துள்ளார்... தாட்சரை அடித்து கொடுமைப்படுத்தியது முதல், எல்லா சம்பவமும் நடந்தது இந்த மணப்பாறை வீட்டில்தான்.. அதனால் இந்த வழக்கு மணப்பாறை மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவையும் தஞ்சை மாவட்ட எஸ்பி பிறப்பித்துள்ளார். இதற்கான உரிய உத்தரவு நகலை பெற்று கொண்டபிறகு விசாரணை ஆரம்பமாகும் என தெரிகிறது. ஆனால் வழக்கு திருச்சி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது, புகார் கொடுத்த தாட்சர் தரப்பினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளதாம். ஏனென்றால், எட்வின் ஜெயக்குமார் உறவினர்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அச்சப்படுகிறார்கள். மேலும், விசாரணைக்காக அவர்கள் தஞ்சையில் இருந்து மணப்பாறைக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனினும், வல்லத்தில் இருந்து வழக்கு மாற்றப்பட்டுள்ளதால் இச்சம்பவத்தில் திருப்பம் ஏற்படலாம் என்றும்,எட்வின் குறித்த மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

English summary
manapparai bank staff jayakumar case issue andthe case has been transferred to the Trichy police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X