திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா "புண்ணியத்தால்" 23 அரியர் பாடங்களிலும் ஆல்பாஸ் ஆன "நேரு".. மகிழ்ச்சியில் முதல்வருக்கு நன்றி!

அரியர்களை பாஸ் செய்ய வைத்த முதல்வருக்கு திருச்சி மாணவர் நன்றி தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

திருச்சி: "ஒன்னுல்ல.. ரெண்டு இல்ல.. எனக்கு மொத்தம் 23 அரியர்கள்.. அத்தனையும் ஆல் பாஸ் பண்ணிவிட்டார் நம்ம முதல்வர் எடப்பாடியார் செம செம" என்று சொல்லி குஷியில் ஒரு மாணவர் வானத்துக்கும் பூமிக்குமாக துள்ளி குதிக்கிறார்.. இவ்வளவையும் சொல்லிவிட்டு, கடைசியில் "கொரோனாவுக்கு ரொம்ப நன்றி" என்றதுதான் ஹைலைட்டே!

Recommended Video

    கல்லூரி தேர்வு ரத்து தொடர்பாக முதல்வர் சூப்பர் உத்தரவு!

    லாக்டவுன் போட்டதில் இருந்தே பிள்ளைகளுக்கு ஸ்கூல், காலேஜ்கள் மூடப்பட்டுவிட்டன.. ஆனாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன.. இதில் எல்கேஜி குழந்தைகளும் விலக்கல்ல!

    இந்த சமயத்தில்தான் கொரோனா பிரச்சினையால் தேர்வு எழுத முடியாமல் போன எஸ்எஸ்எல்.சி. மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர்.

    நீட், ஜேஇஇ-க்கு எதிரான மனு தள்ளுபடி- உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி 6 மாநிலங்கள் மனு நீட், ஜேஇஇ-க்கு எதிரான மனு தள்ளுபடி- உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி 6 மாநிலங்கள் மனு

     செமஸ்டர்

    செமஸ்டர்

    இது 10-ம் கிளாஸ் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.. ஆனால் காலேஜ்களில் கடந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போன நிலையில் அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறதோ? என மாணவர்கள் தவித்து வந்தனர். அவர்களுக்கு ஜாக்பாட்டாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செமஸ்டர் தேர்வுகளில் ஆல்பாஸ் செய்ததோடு மட்டுமின்றி அரியர் வைத்திருந்த மாணவர்களையும் ஆல்பாஸ் செய்து திக்குமுக்காட வைத்து விட்டார்.

     பிரைவேட் காலேஜ்

    பிரைவேட் காலேஜ்

    இந்த நிலையில் இதை பற்றி ஒரு மாணவர் சொல்லும்போது, திருச்சியில் ஒரு பிரைவேட் காலேஜில் என்ஜினீயரிங் 3-ம் வருஷம் படித்து வந்தேன்.. எடமலைப்பட்டி கிராப்பட்டிதான் என் ஊர்.. என் பெயர் சஞ்சய் நேரு.. 23 வயதாகிறது.. நான் மெட்ரிக்கில் 10-ம் வகுப்பு தேர்வில் 427 மார்க் எடுத்தேன்.. பிளஸ்-2வில் 905 மார்க் எடுத்தேன்.. என்ஜினீயரிங் பாடங்கள் எதுவுமே புரியவில்லை. மனப்பாடம் செய்தாலும் எதுவுமே எனக்கு ஏறல.

    டிகிரி

    டிகிரி

    சிபிஎஸ்இ படித்த மாணவர்கள் மட்டும் இதை எளிதில் புரிந்து கொண்டனர்... இதனால் படிப்பில் எனக்கு சுத்தமா ஆர்வமே இல்லாமல் போய்விட்டது... பேசாமல் பாதியிலேயே நின்னுடலாமான்னுகூட யோசிச்சேன்.. ஆனால் எங்க வீட்டில் டிகிரி வேணும்னு சொல்லிட்டாங்க.

     அரியர்கள்

    அரியர்கள்

    முன்னாடியெல்லாம் அரியர்களை விரும்புற நேரத்தில் எழுதலாம்.. ஆனால் இப்போ அப்படி கிடையாது.. முதல் வருஷம் அரியர் முடிச்சால்தான் 4-ம் வருஷத்துக்கு அனுப்பி வைப்போம்னு அண்ணா யூனிவர்சிட்டி சொல்லிவிட்டது.. எனக்கு மொத்தம் 23 அரியர்கள்.. அதனால வேற வழியில்லாமல் 23 அரியர் பாடங்களுக்கும் பீஸ் கட்டினேன்.

     எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    இந்த சமயத்தில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என் அரியரை எல்லாம் பாஸ் செய்து அறிவிச்சிட்டார்.. இது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்துள்ளது.. அரியர் எழுதுவது ஏழை மாணவர்களுக்கு பொருளாதார சுமையை தருகிறது... முதலில் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.150 பீஸ் கட்டணும்.. தேர்வுக்கு பிறகு மறுமதிப்பீடு கேட்க ரூ.150 கட்டணும்.. பாஸ் ஆகும் மார்க் எடுத்திருந்தால் தவறுகளை சுட்டிக்காட்டி திரும்பவும் அனுப்ப ரூ.450 செலவழியும்.

     ஆல் பாஸ்

    ஆல் பாஸ்

    ஆகையினால் இந்த ஆல்பாஸ் முடிவு என்னை போன்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.. எங்க கிளாஸில் 12 மாணவ -மாணவிகள் உள்ளனர்.. இவர்களில் ஒரு மாணவியை தவிர்த்து எல்லாருமே அரியர் வெச்சிருந்தோம்.. இப்போ ஆல் பாஸ் ஆகிவிட்டோம்.. கொரோனாவுக்கு மிக்க நன்றி" என்றார்.

    English summary
    Trichy arrear Student thanking CM Edapadi palanisamy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X