திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சியில் 36 திருநங்கைகளுக்கு ரூ 1500 மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கிய ஆட்சியர்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாநகராட்சி சார்பில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை இன்று மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் வழங்கினார்.

மாநகராட்சிப் பகுதியில் கொரோனா தொற்று தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 Trichy Collector helps Transgender by giving groceries

இந்த காலகட்டத்தில் திருநங்கைகள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கொரோனா நிவாரணப் பொருட்களை மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் வழங்கினார்.

கொரோனா நோய் தொற்றின் காரணமாகவும், கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மாநகராட்சி பகுதியில் எந்தவிதமான வருமானமின்றி, ஆதரவின்றி இருக்கும் திருநங்கைகளுக்கு உதவிடும் வகையில் பொன்மலை கோட்டம் உதவி ஆணையர் எம்.தயாநிதி ஏற்பாட்டில் 36 திருநங்கைகளுக்கு அரிசி , மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட ரூ.1500 மதிப்பிலான உணவுப்பொருட்களை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வழங்கினார்.

இந்தியா, சீனாவுக்கு அடுத்து.. ஆசியாவில் கொரோனா ஆட்டம் ஜாஸ்தியாக இருப்பது.. சிங்கப்பூரில்தான்! இந்தியா, சீனாவுக்கு அடுத்து.. ஆசியாவில் கொரோனா ஆட்டம் ஜாஸ்தியாக இருப்பது.. சிங்கப்பூரில்தான்!

பின்னர் ஆணையர் தெரிவித்ததாவது, ஆதரவின்றி இருக்கும் திருநங்கைகள் தாங்கள் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்க பயன்படுத்தும் முக கவசங்கள் தயார்செய்து கொடுத்தால் அதை மாநகராட்சி நிர்வாகம் வாங்கி கொள்வோம் என்று தெரிவித்தார். அனைவரும் கட்டாயமாக முக கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

English summary
Trichy collector Sivasubramanian offers help for Transgenders those who loss their livelihood because of lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X