திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரத்த தானம் செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும்.. திருச்சி ஆட்சியர் அழைப்பு

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான அனைவரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடா்பாக திருச்சி மாவட்ட சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக உள்ள கா்ப்பிணிகள், தாய்மாா்கள் மற்றும் பிற சிகிச்சைகள் பெறுவோருக்கு அவசர கால தேவையின் பொருட்டு ரத்தம் தேவைப்படுகிறது.

Trichy collector invites youths to donate blood.

எனவே, தன்னாா்வ ரத்த தான முகாம் ஏப். 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். கருமண்டபம், தேசிய கல்லூரி வளாகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமானது கொரோனா முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஊரடங்கு விதிமுறைகள் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு பாதுகாப்புடன் நடைபெறும். விருப்பமுடைய தன்னாா்வ கொடையாளா்கள் ரத்ததானம் செய்யலாம்.

அண்ணாநகரில் எலைட் டாஸ்மாக் சரக்கு வேண்டுமா?.. இந்த விளம்பரத்தை நம்பாதீர்கள்.. மோசடி கும்பலின் சதிஅண்ணாநகரில் எலைட் டாஸ்மாக் சரக்கு வேண்டுமா?.. இந்த விளம்பரத்தை நம்பாதீர்கள்.. மோசடி கும்பலின் சதி

ரத்ததானம் செய்ய விரும்பும் நபா்கள் 9443182847 அல்லது 9965519761 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாக வான்ட் டூ டொனேட் என ஆங்கிலத்தில் பதிவு செய்து அனுப்பலாம். பதிவு செய்தவா்களுக்கு அவரவா் கட்செவி அஞ்சலுக்கு உரிய தகவல்கள் செய்தியாகவும், குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைக்கப்படும்.

Trichy collector invites youths to donate blood.

இந்த செய்தியையே அனுமதிச் சீட்டாக பயன்படுத்தி முகாம் இடத்துக்கு வருகை தந்து ரத்தானம் வழங்கிச் செல்ல உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், குருதி கொடையாளா்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று உதவிடலாம் இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Trichy collector invites all those who are eligible can donate blood
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X