திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விபத்தில் சிக்கி உயிரிழந்த தொட்டியம் வருவாய் ஆய்வாளர் உடலுக்கு திருச்சி ஆட்சியர் மரியாதை

Google Oneindia Tamil News

திருச்சி: கொரோனா பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி மரணமடைந்த தொட்டியம் வருவாய் ஆய்வாளர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்தவர் சேகர். இவர் நேற்று மதியம் கொரோனா பணி முடிந்து முசிறி திருமுருகன் நகரிலுள்ள தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, வரதராஜபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கினார்.

 Trichy Collector pay tribute to Revenue Inspectors body who died in accident

உடனடியாக நாமக்கலிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

 Trichy Collector pay tribute to Revenue Inspectors body who died in accident

இந்நிலையில் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு விபத்தில் மரணமடைந்த தொட்டியம் வருவாய் ஆய்வாளர் சேகர் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த ஆட்சியர், ஈம சடங்கு நிதியை அவரது மகனிடம் வழங்கினார்.

 Trichy Collector pay tribute to Revenue Inspectors body who died in accident

மரணமடைந்த தொட்டியம் வருவாய் ஆய்வாளர் சேகருக்கு வளர்மதி என்ற மனைவியும், பரத் என்ற மகனும் உள்ளனர். மேலும் விபத்து குறித்து தொட்டியம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

அரசு என்னதான் செய்யுது.. நாளைக்கு ஆலோசிப்போம்.. 18 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு.. திமுக பங்கேற்புஅரசு என்னதான் செய்யுது.. நாளைக்கு ஆலோசிப்போம்.. 18 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு.. திமுக பங்கேற்பு

English summary
Trichy Collector pay tribute to Revenue Inspector's body who died in accident while returning to home after his duty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X