திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துவரங்குறிச்சியைச் சோ்ந்தவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி.. திருச்சி கலெக்டர் சிவராசு தகவல்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சோ்ந்த 39 வயது ஆணுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது நேற்று இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.

Recommended Video

    கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு தன் வீட்டையே கொடுத்த நபர் | ONEINDIA TAMIL

    சென்னையிலிருந்து மார்ச் 22- ஆம் தேதி துவரங்குறிச்சி வந்த இவா், மீண்டும் சென்னை சென்றுள்ளார். அப்போது சளி, காய்ச்சல் இருந்ததால் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு ரத்த மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    Trichy Collector Sivarasu conform, a thuvarankurichi man affected by coronavirus

    இந்த சோதனையில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது. இதுதொடா்பான தகவல் திருச்சி மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் துவரங்குறிச்சியைச் சுற்றியுள்ள 7 கி.மீ.சுற்றளவுக்கு 50 குழுக்களைக் கொண்டு சுகாதாரத் துறையினா் சோதனை மேற்கொண்டதில், நோய்த் தொற்று ஏதும் இல்லை எனத் தெரிய வந்தது.

    மேலும், துவரங்குறிச்சியில் சுமார் 3,200 வீடுகளில் மருத்துவக்குழுவினா் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல், தும்மல், யாருக்காவது கொரோனா வைரஸ் நோய்த் தொற்று அறிகுறி உள்ளதா என ஆய்வு செய்த போதும், யாருக்கும் இல்லை என தெரியவந்துள்ளது.

    அந்த நபா் தங்கியிருந்த வீட்டிலுள்ள 3 பேரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தொடா்ந்து, கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வீட்டுக்குள்ளேயே இருந்தால் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

    English summary
    Trichy Collector Sivarasu said that a thuvarankurichi man affected by coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X