திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கைது பண்ண போறாங்களாம் தலைவா.. தாவு தலைவா தாவி ஓடிரு... திருச்சியை கலங்கடித்த காங். போராட்டம்!

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக திருச்சியில் போராட்டம் நடத்தப்பட்டது

Google Oneindia Tamil News

திருச்சி: ஆர்ப்பாட்டத்தில், போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டே இருந்த கோவிந்தராஜ், கைது செய்ய போலீஸ் வருவதை பார்த்ததும், திடீரென எகிறி குதித்து தப்பி எஸ்.ஆகி விட்டாராம்!

சோனியாகாந்தி, ராகுல்காந்தியை சில நாட்களாகவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்து வருவதாக கூறி, திருச்சி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைச்சரை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமை தாங்கினார்.

Trichy Congress party protest against TN Minister

முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், வக்கீல் மா.சரவணன், ஆர்சி.பாபு, இளைஞர் காங்கிரஸ் விச்சு, மகேந்திரன், கள்ளிக்குடி குமார், மகளிரணி ஜெகதீஸ்வரி, கிரேஸி, ஜோதி, அமிர்தவள்ளி, ஹெலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் எதிரேதான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆர்ப்பாட்டத்தினரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதாவது கயிறுக்குள் இருந்து ஆர்ப்பாட்டம் செய்யும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

Trichy Congress party protest against TN Minister

மற்ற கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் கண்டு கொள்வதில்லை என்று சொல்லிய போராட்டகாரர்கள் ரோட்டில் போய் உட்கார்ந்து கொண்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

இந்தி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது நச்சுக் கருத்து: ப.சிதம்பரம் காட்டம்இந்தி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது நச்சுக் கருத்து: ப.சிதம்பரம் காட்டம்

அப்போது, ஆர்ப்பாட்டம் என்று வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு, கைது என்றவுடன் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் ஓட்டம் பிடித்து விட்டதாக காங்கிரஸ் தொண்டர்கள் குற்றஞ்சாட்டினர். இது சம்பந்தமாக ஆடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

English summary
Trichy Congress Protest against TN Minnister Rajendra Balaji and Police arrested them
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X