திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நைட் வீட்டுக்கு வந்து.. அம்மா சேலையை தேடி எடுத்து.. கொட்டகையில் தூக்கு போட்டு கொண்ட போலீஸ்காரர்!

திருச்சியில் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

திருச்சி: டியூட்டி முடிச்சிட்டு நைட் வீட்டுக்கு வந்ததும், அம்மா புடவையை தேடி எடுத்து கொண்டு, மாட்டுக் கொட்டகைக்கு போய் தூக்கு போட்டுக் கொண்டார் ஒரு போலீஸ்காரர்.. இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருப்பரைது பெரிய நகரில் வசித்து வந்தவர் ஆனந்த்.. 26 வயசாகிறது.. இவர் வாத்தலை போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்து வருகிறார்.. நேற்றிரவு இவர் டியூட்டி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.. 11 மணி வரை உட்கார்ந்திருந்தார்.

 trichy constable committed suicide due to online rummy game

பிறகு திடீரென தன்னுடைய அம்மா புடவையை தேடி எடுத்தார்.. பிறகு வீட்டுக்கு பின்னாடி இருந்த மாட்டுக் கொட்டகை சென்று, அங்கேயே தூக்கு மாட்டி தற்கொலையும் செய்து கொண்டார், இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அலறி துடித்தனர்.. தகவலறிந்து ஜீயபுரம் போலீசாரும் வந்துவிட்டனர்.

சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து, விசாரணையையும் ஆரம்பித்தனர். அப்போதுதான் இந்த போலீஸ்காரர் ஆனந்த், ரம்மி விளையாடுபவர் என தெரியவந்தது.. எப்பவுமே ஆன்லைனில் ரம்மி விளையாடுவாராம்.. இந்த ரம்மி விளையாட்டுக்காக தன்னுடைய நண்பர்களிடம் கடன் வாங்கியும் விளையாடி வந்திருக்கிறார்.

 trichy constable committed suicide due to online rummy game

ஒரு கட்டத்தில் இந்த கடன் தொகையே அதிகமாகிவிட்டது.. மன உளைச்சலை தீர்த்து கொள்ள ரம்மி விளையாட போய், அதனாலேயே இன்னும் அதிகமான மன உளைச்சல் இவருக்கு வந்துவிட்டது.. இதன் காரணமாகவே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக முதல்கட்டமாக போலீசார் சொல்கிறார்கள். எனினும் உண்மை காரணத்தை தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

"அம்மா பெட்ரூம்ல லைட் எரியுதுப்பா.. முனகல் சத்தம் வேற".. மகன் கதறியதால் கொன்றேன்.. பகீர் வாக்குமூலம்

இப்படித்தான் சென்னையில் 10 நாளைக்கு முன்பு நித்திஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.. அவரும் ஆன்லைனில் சீட்டு விளையாடி, பணத்தை தொலைத்து, கடனை வாங்கி, அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

 trichy constable committed suicide due to online rummy game

இப்படி, இளைஞர்களை மெல்ல மெல்ல கொன்று வருகிறது இந்த ஆன்லைன் விளையாட்டுக்கள்.. விளையாட்டில் மூழ்கிவிடுவதால், அப்படியே மாரடைப்பு ஏற்பட்டு 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமும் ஈரோட்டில் நடந்தது.. இதெல்லாம் அநியாய மரணங்கள்.. டிக்டாக் மாதிரி இதற்கெல்லாம் தடை விதித்தாலும் நல்லாதான் இருக்கும்!

English summary
trichy constable committed suicide due to online rummy game
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X