திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேளாண் சட்டங்களை ராக்கெட் செய்து பறக்க விட்ட திருச்சி விவசாயிகள்... டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்,வேளாண் சட்ட நகலை ராக்கெட் போல செய்து மோடிக்கு அனுப்புவது போல் பறக்கவிட்டு முழக்கமிட்டனர்.

Google Oneindia Tamil News

திருச்சி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறவும், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 5ம் நாளாக இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Trichy farmers rally in support of Delhi farmers protest

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறவும், நிபந்தனையின்றி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் தனது ஒரு பக்க தாடி மற்றும் மீசையை மழித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வேளாண் சட்ட நகலை ராக்கெட் போல செய்து மோடிக்கு அனுப்புவது போல் பறக்கவிட்டனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

தடுப்பையே அடுப்பா மாத்துவோம்... கடும் குளிரிலும் டெல்லியை தெறிக்க விடும் விவசாயிகள்தடுப்பையே அடுப்பா மாத்துவோம்... கடும் குளிரிலும் டெல்லியை தெறிக்க விடும் விவசாயிகள்

செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திவருகின்றனர். நல்ல தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அய்யக்கண்ணு கூறியுள்ளார்.

English summary
More than 100 farmers, led by Ayyakannu, today besieged the Trichy district collector's office and staged a sit-in protest in front of the entrance, urging the central government to withdraw the agrarian laws and hold talks with the farmers in support of the struggling farmers in Delhi. stopped us. Centre must take back the new farm laws," a farmer said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X