திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு நாளை சீல்.. மாநகராட்சி திடீர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி நகரில் தடைசெய்யப்பட்ட பகுதிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காந்திமார்க்கெட் பகுதிக்கு நாளை 'சீல்' வைக்கப்படுகிறது என மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரேநாளில் 133 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,146 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 2,557 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவின் பிடியில் சிக்கி இதுவரை 60 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 Trichy Gandhi Market will be sealed tomorrow

திருச்சி மாநகராட்சி பகுதியில் மட்டும் 2,410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெரிய கடைவீதி மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் பாதிப்பு அதிகளவில் இருந்ததால் அவை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் தற்போது திருச்சி மாநகரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பாலக்கரை செங்குளம் காலனி, வரகனேரி மாமுண்டிசாமி கோவில் தெரு, தாராநல்லூர் கம்பி போட்ட பிள்ளையார் கோவில் தெரு, அரியமங்கலம், பாலக்கரை பள்ளிவாசல் தெரு, உறையூர், ராமலிங்க நகர், கே.கே.நகர் அய்யப்பநகர், ஜே.கே.நகர், பொன்மலைப்பட்டி காந்தி தெரு, நேரு தெரு, திருவெறும்பூர் வின்நகர் ஆகிய பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருப்பதால் அவை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் சவுக்கு கம்புகளால் தடை ஏற்படுத்தப்பட்டு, தகர தடுப்புகளால் அடைத்து வைக்கப்பட்டு உள்ளது.

 Trichy Gandhi Market will be sealed tomorrow

திருச்சி காந்தி மார்க்கெட்டில் 2 நாட்களுக்கு முன் வியாபாரிகள் மற்றும் சுமைப் பணியாளர்கள் 93 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்த 8 பேரும் காந்திமார்க்கெட்டை சுற்றி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவார்கள்.

அதிகரிக்கும் கொரோனா.. என்ன செய்வதென புரியாமல் கைவிட்ட பெங்களூர் மாநகராட்சி.. சென்னை எவ்வளவோ பெட்டர் அதிகரிக்கும் கொரோனா.. என்ன செய்வதென புரியாமல் கைவிட்ட பெங்களூர் மாநகராட்சி.. சென்னை எவ்வளவோ பெட்டர்

இதனை தொடர்ந்து காந்தி மார்க்கெட்டை சுற்றி உள்ள தஞ்சாவூர் சாலை, நெல்பேட்டை, மணிமண்டப சாலை, தர்பார்மேடை, பாலக்கரை ரோடு, எடத்தெரு ரோடு, வெல்லமண்டிரோடு, மீன்மார்க்கெட், கிருஷ்ணாபுரம் ரோடு, பழக்கடை பகுதி ஆகிய 10 இடங்களுக்கு நாளை (2-ஆம் தேதி) இரவு சீல் வைத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Recommended Video

    Viral Video: Tamil Announcement In flight | Pilot Priyavignesh | Oneindia Tamil

    இந்நிலையில் நேற்று திருச்சி நகரில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்ட இடங்களிலும், பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமைப்படுத்தப்பட்ட முகாம், ஸ்ரீரங்கம் யாத்ரீ நிவாஸ் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களை கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

    English summary
    Trichy Corporation says that Gandhi Market will be sealed tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X