• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'ஜெயிச்சுட்டோம் மாறா'.. ஐஐடியில் சேரும் கூலித்தொழிலாளி மகன்! ஜெயிக்க காரணமான அந்த 2 விஷயங்கள்

Google Oneindia Tamil News

திருச்சி: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐஐடி பற்றி கேள்விப்படாத திருச்சி மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், மன உறுதியும் விடாமுயற்சியுடன் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் தரவரிசைப் பட்டியலில் அகில இந்திய அளவில்17,061-ம் இடம், ஓபிசி-என்சிஎல்-ல் 3,649-ம் இடம்பெற்றுள்ளார்.

ஓட்டலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி பொன்னழகனின் மகனான அருண்குமார், அதிகாரமும் பணபலமும் அதிகம் உள்ள உயர்வருவாய் மக்களே சேருவதற்கு தவம் இருக்கக்கூடிய ஐஐடியில் சேரப்போகிறார். மாநில அரசு பள்ளி மாணவர் ஐஐடியில் சேரப்போவது அரிய நிகழ்வு ஆகும்.

திருச்சி நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் , செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.

பாத்ரூமில் கொடுமை.. போனில் ஆபாச படங்கள்.. 6 வயது சிறுமியை அடித்தே கொன்ற 3 சிறுவர்கள்.. அதிர்ச்சிபாத்ரூமில் கொடுமை.. போனில் ஆபாச படங்கள்.. 6 வயது சிறுமியை அடித்தே கொன்ற 3 சிறுவர்கள்.. அதிர்ச்சி

திருச்சி

திருச்சி

அருண்குமாருக்கு 2019 ஆம் ஆண்டு JEE பயிற்சிக்கான நுழைவுத் தேர்வுக்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்ததும் அவரது அதிர்ஷ்டம் மாறத் தொடங்கியது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற உதவுவதற்காக NIT- திருச்சியின் மாணவர்கள் நடத்தும் IGNITTE வசதியால் இந்த திட்டம் அந்த மாணவருக்கு கிடைத்தது.

என்ஐடி மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் ஜேஇஇ தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்கு தனியாக தகுதித் தேர்வு வைத்து 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு என்ஐடி மாணவர்களின் கற்பித்தல் மையம் மூலம் வார விடுமுறை நாட்களில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

கூரை ஓடுகள் உள்ள வீட்டில் தனது பெற்றோர், இரண்டு சகோதரிகள் மற்றும் தாத்தா பாட்டிகளுடன் வசிக்கும் அருண் குமார் பல்வேறு கவனச்சிதறல்கள் மற்றும் நிதி சிக்கல்களுக்கு மத்தியில் ஜேஇஇ மெயின் தேர்வில் 98.24 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

தந்தை ஆர்வம்

தந்தை ஆர்வம்

அருண் ஆரம்பத்தில் தனது அடிப்படை மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி நெட்வொர்க் பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நீடித்த அழைப்புகள் மூலம் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டார். பின்னர், அவரது தந்தை பொன்னழகன் தனது மகனுக்கு ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக ஸ்மார்ட்போன் வாங்க ரூ.10,000 கொடுத்தார். அரசாங்கத்தால் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிக்கு ஆடியோ சிக்கல்கள் இருந்தன.

நினைக்கவில்லை

நினைக்கவில்லை

காஞ்சிபுரத்தில் உள்ள உணவத்தில் உதவியாளர் வேலைகளைச் செய்த அருணின் தந்தை தனது மகன் சரியான பள்ளி கல்வி பெற வேண்டும் என்று விரும்பினார். இது தொடர்பாக அவர் கூறும் போது, "ஆறு வருஷத்துக்கு முன்னாடி, தனியார் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாததால, அவனை அரசுப் பள்ளியில் சேர்த்தேன். அவர் ஒரு பிரகாசமான மாணவர் என்பதால் அவரை வேலைக்குத் தள்ளுவது பற்றி நான் ஒருபோதும் நினைத்ததில்லை, " என்று பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்தார்.

ஜேஇஇ தேர்வு

ஜேஇஇ தேர்வு

IGNITTE ஒருங்கிணைப்பாளர் எஸ் ரோஹித் கூறுகையில், கடந்த ஆண்டுக்கான இட ஒதுக்கீட்டின்படி அருண் ஐஐடி ஒன்றில் இடம் பெறுவார் என்றார். அருணின் பள்ளி தலைமையாசிரியர் அமுதா பாரதி கூறுகையில், மாநிலத்தில் வேறு எந்த அரசு பள்ளி மாணவரும் JEE தேர்ச்சி பெறவில்லை என்றார்.

கொரோனா

கொரோனா

அருண்குமார் கூறும் போது, 2019 ஆம் ஆண்டு வரை ஐஐடிகள் இருப்பதைப் பற்றி எனக்குத் தெரியாது . தரமான பயிற்சி மற்றும் பயிற்சியளித்தவர்கள், மிக முக்கியமாக என் குடும்பம் மற்றும் என் பள்ளி என் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்த சாதனையை அடைய எனக்கு உதவியது. எங்கள் சிரமங்கள் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் இருந்த போது, படிப்பில் கவனத்தை சிதறவிடல்லை என்றார்.

செமஸ்டர் கட்டணம்

செமஸ்டர் கட்டணம்

இப்போது கூட, அருணினின் குடும்ப ஐஐடியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவது பற்றி கவலைப்படுகிறார்கள், ஏனெனில் அவர்களின் மாத வருமானம் சில ஆயிரங்கள் கூட இல்லை. அடுத்த சில நாட்களில் ஐஐடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கும் நிலையில், ஐஐடியில் சேரும் அரசுப் பள்ளி மாணவனின் கனவை நிறைவேற்ற ஸ்காலர்ஷிப் மற்றும் உதவியை அருணின் குடும்பத்தினர் எதிர்பார்க்கிறார்கள். மாணவர் அருணினின் குடும்பத்தை 9698446253 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வாய்ப்பு

வாய்ப்பு

மாணவனின் விடா முயற்சி, என்ஐடி மாணவர்கள் கொடுத்த இலவச பயிற்சி வாய்ப்பு இரண்டு தான் மாணவனை ஜேஇஇ மெயின் தேர்வில் பெற வைத்துள்ளது. சாதனையாளர்கள் பிறப்பது உருவாக்கப்படுகிறார்கள். எனவே சாதனையாளர்களை உருவாக்க வாய்ப்பு தான் இங்கு தேவை. எங்கு ஏழைகளுக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கிறேதா, அங்கு மேஜிக் நிகழும்.

English summary
A 17-year-old boy from a small village in Trichy district, who had not heard of IITs until two years ago, with determination and perseverance won the first attempt at the JEE Advanced exam. He is ranked 17,061 in All India and 3,649 in OBC-NCL.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion