திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சியில் பழிவாங்கும் முன் கொலை செய்ய 'ஸ்கெட்ச்'.. ஆயுதங்களுடன் காத்திருந்த கூலிப்படையினா் கைது

Google Oneindia Tamil News

திருச்சி: ரவுடி கொல்லப்பட்ட விவகாரத்தில் தந்தை பழிவாங்கத் திட்டமிட்டவா்களை கொல்லும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் காத்திருந்த மகன்கள், கூலிப்படையினா் 6 பேரை திருச்சி போலீசார் கைது செய்தனர்

திருச்சி பாலக்கரை பகுதியில் சிலா் ஆயுதங்களுடன் காத்திருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் பாலக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோகரன் தலைமையிலான போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். முதலியார் சத்திரம் நாகம்மாள் கோயில் அருகே போலீசார் சென்றபோது, அங்கு நின்றிருந்த ஒரு கும்பல் தப்பியோட முயன்றது.

Trichy police arrest 6 mercenaries who were waiting with weapons with intention of killing

அவா்களை போலீசார் பிடித்து மேற்கொண்ட தொடா் விசாரணையில், அவா்கள் முதலியார்சத்திரம் ஆசாரி தெரு சங்கா் மகன் ராஜ்கமல் ( 21) இவரது அண்ணனான வழக்கறிஞா் ரவிக்குமார் (25), மதுரை அரசடி ஜெயில்சாலை முத்துக்கிருஷ்ணன் (23), மதுரை ஆரப்பாளையம் மஞ்சமேட்டு காலனி சண்முகம் மகன் அஜய்பிரசன்னகுமார் (19), திருச்சி கோரிமேடு கூனிபஜார் கந்தன் மகன் ஜோ என்கிற பிரசாத் (21), திருச்சி பொன்மலை வாசுதேவன் மகன் ஆனந்தகுமார் (21) என்பதும், இவா்களில் ராஜ்கமல், ரவிக்குமார் தவிர மற்ற அனைவரும் கூலிப்படையினா் என்பதும் தெரியவந்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த ரௌடியான தலைவெட்டி சந்துரு எனப்படும் சந்திரசேகரன் கடந்த சில மாதங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் ராஜ்கமல், ரவிக்குமார் ஆகியோரின் தந்தை சங்கா் மற்றும் அவரது நண்பா்கள் சிலருக்குத் தொடா்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே சங்கரைக் கொலை செய்ய ரௌடி சந்துருவின் நண்பா்கள் பிரின்ஸ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் திட்டமிட்டிருந்தனராம். இதையறிந்த ராஜ்கமல், ரவிக்குமாா் ஆகியோர் தங்களது தந்தை சங்கரை கொலை செய்யும் முன் பிரின்ஸ், முருகானந்தம் ஆகியோரைக் கொல்லத் திட்டமிட்டு மதுரை மற்றும் திருச்சியைச் சோ்ந்த கூலிப்படையினருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்திருந்தனராம்.

இந்நிலையில் கூலிப்படையினருடன் சகோதரா்கள் போலீஸாரிடம் சிக்கினா். அவா்களிடமிருந்து பட்டாக்கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்தனா். கோட்டை காவல் உதவி ஆணையா் ரவி அபிராம், மற்றும் பாலக்கரை காவல் ஆணையா் சண்முகவேல் உள்ளிட்டோர் தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பின்னர் கைதான 6 பேரும் திருச்சி 5-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

English summary
Trichy police arrest 6 mercenaries and son who were waiting with weapons with the intention of killing those who planned to take revenge on their father in the case of Rowdy's murder
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X