திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலீசாரின் பிடியில் மஞ்சுளா.. கொள்ளையன் முருகனை பற்றி என்னவெல்லாம் சொல்ல போகிறாரோ.. விறுவிறு விசாரணை

முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jewellery Theif Murugan story Revealed

    திருச்சி: முருகனை பற்றி என்னவெல்லாம் சொல்ல போகிறாரோ மஞ்சுளா.. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு சம்பந்தமாக முருகனின் மனைவி மஞ்சுளாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நகைக்கடையில் ஓட்டையை போட்டு, ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை அள்ளிக் கொண்டு போனார்கள் கொள்ளையர்கள். 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இதில் மணிகண்டனிடம் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மணிகண்டனுடன் பைக்கில் வந்து தப்பியோடிய சுரேஷ் பின்னர் செங்கம் கோர்ட்டில் சரணடைந்தார். முக்கிய குற்றவாளியான முருகனும் பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தனர்.

    முந்திரி தோப்பில் மீனாவை புதைத்தது ஏன்.. கோழிப்பண்ணை ஓனர் கமலம் பரபரப்பு வாக்குமூலம்முந்திரி தோப்பில் மீனாவை புதைத்தது ஏன்.. கோழிப்பண்ணை ஓனர் கமலம் பரபரப்பு வாக்குமூலம்

    பறிமுதல்

    பறிமுதல்

    இப்போது, இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 25 கிலோ நகைகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுபோக முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி தனிப்படை போலீசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சி

    திருச்சி

    இந்த நிலையில் திருவாரூரில் தங்கியிருந்த முருகனின் மனைவி மஞ்சுளாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதற்காக மஞ்சுளாவை திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நகைக்கடை

    நகைக்கடை

    ஒவ்வொரு இடத்தில் கொள்ளை அடிக்கும்போதும், முருகன் மனைவி, குடும்பத்துடன்தான் அந்தந்த பகுதிகளில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்திருக்கிறான். மேலும் லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பந்தமாக போலீசார் விசாரிக்கும்போது, மனைவியுடன் நகைக்கடைக்கு சென்று நோட்டமிட்டதாகவும் ஒரு தகவல் வந்தது. அதனால், மஞ்சுளாவுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

    மஞ்சுளா

    மஞ்சுளா

    முருகன் இதுவரை கொள்ளையடித்த நகைகளை வேறு எங்காவது பதுக்கியுள்ளாரா? சொத்துக்கள் ஏதும் வாங்கியுள்ளாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணை மூலம் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    English summary
    trichy police investigation to gang leader murugans wife munjula in lalitha jewellery shop theft issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X