திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆதரறவற்ற பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி போலீஸ்காரர்.. குவியும் வாழ்த்துக்கள்

Google Oneindia Tamil News

திருச்சி: லாக்டவுனில் ஆதரவின்றி தவித்த ஒரு பெண்ணுக்கு திருச்சி போலீஸ்காரர் ஒருவர் உதவி வழங்கியதுடன் ஆதரவற்றோா் இல்லத்தில் அவரை சேர்த்துவிட்டார்... இதற்கு காவலருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

திருச்சி கன்டோன்மெண்ட் ஸ்டேஷனில் வேலை பார்ப்பவர் திருமுருகன். இவர் திருச்சி பஸ்ஸ்டாண்டில் நேற்று ரோந்து போயிருக்கிறார்.. அப்போது, 50 வயது மதிப்புடைய ஆதரவற்ற பெண் ஒருவர் உட்கார்ந்திருந்ததை கண்டார்... விசாரணையில், புதுக்கோட்டையை சேர்ந்த பழனியம்மாள் என்பது தெரியவந்தது.

 trichy policeman helps poor woman

திருப்பூரில் வேலை பார்த்துவந்தநிலையில், லாக்டவுனில் சிக்கிவிட்டதால், வேலை போய்விட்டது. சொந்த ஊருக்கும் போக முடியவில்லை என்றும் கையில் இருந்த பணம் கரூர் வரை செல்ல மட்டுமே உதவியது என்றும் சொன்னார். அதனால் கரூரில் இருந்து நடந்தே திருச்சிக்கு வந்து, 2 நாட்களாக எங்கு போவது என வழி தெரியாமல் பஸ் ஸ்டேண்டில் இருப்பதாகவும் அந்த பெண் கூறினார்.

சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல் தவித்து வந்துள்ள அந்த பெண்ணுக்கு, திருமுருகன் உடனடியாக தண்ணீர், சாப்பாடு, பிஸ்கட் வாங்கி சாப்பிட தந்துள்ளார்.. பழனியம்மாளிடம் அவரது குடும்பத்தினரது போன் நம்பர் வாங்கி விவரத்தை சொன்னார்.. ஆனால் யாருமே வந்து பழனியம்மாளை அழைத்து செல்ல முன்வரவில்லை போலும்..

300 முறை போலீசை சுட்ட ரவுடி விகாஷ் துபேவின் ஆட்கள்.. வீட்டின் பதுங்கு குழியில் ஏராளமான ஆயுதங்கள் 300 முறை போலீசை சுட்ட ரவுடி விகாஷ் துபேவின் ஆட்கள்.. வீட்டின் பதுங்கு குழியில் ஏராளமான ஆயுதங்கள்

அதனால் திருச்சியில் உள்ள முதியோா் இல்லத்தில் சேர்த்து விடட்டுமா என்று அப்பெண்ணை கேட்க, அவரும் சரி என்று சம்மதம் தெரிவித்தார்.. இதையடுத்து, கிராப்பட்டியில் உள்ள கங்காரு முதியோர் இல்லத்தில் அவரை ஒப்படைத்து கவனித்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு கிளம்பினார். போலீஸ்காரர் திருமுருகனின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

English summary
trichy policeman helps poor woman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X