திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சனிக்கிழமை ராத்திரி.. நைஸாக வீட்டுக்கு வந்த ஏட்டு ராமர்.. பூட்டைபோட்டு மாட்டிவிட்ட மக்கள்.. பரபரப்பு

தவறான செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

திருச்சி: கணவரை காணவில்லை என்று புகார் தர வந்த ஒரு பெண்ணை.. மயக்கி அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் போலீஸ்காரர் ஒருவர்.. விஷயம் வெளியே தெரிந்து.. ஊர் மக்களே கள்ளக்காதல் ஜோடியை ரூமுக்குள் வைத்து கதவை இழுத்து பூட்டி விட்டனர்!

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள பகுதி புலிவலம் பகுதியை சேர்ந்தவர் சிராஜுநிஷா என்ற பெண்.. இவரது தம்பி முகம்மது ஜக்ரியா.. வயது 25, மனைவி வயது 27.

ஏழு வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர்.. வயது தெரிந்துதான் பெண்ணை மணமுடித்தார் இளைஞர்.. இவர்களுக்கு குழந்தை இல்லை. லவ் மேரேஜ் என்பதால் சிராஜுநிஷா கோபத்தில் தன் தம்பியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

கணவனை காணோம்

கணவனை காணோம்

4 மாதத்துக்கு முன்பு வேலைக்காக சென்னை சென்றவர் திரும்பி வரவே புலிவலத்துக்கு வரவே இல்லை. தம்பியை காணோம் என்று சிராஜுநிஷா போலீசில் புகார் தந்தார்.. அதேபோல, கணவனை காணோம் என்று காதல் மனைவி புலிவலம் ஸ்டேஷனில் புகார் தந்தார்... இந்த புகாரை மட்டும் பெற்று கொண்ட ராமர் என்ற ஏட்டு, விசாரணைக்காக அந்த பெண்ணை ஸ்டேஷனுக்கு பலமுறை வரவழைத்துள்ளார்.. செல்போன் நம்பரை வாங்கி வைத்து கொண்டு பேச ஆரம்பித்துள்ளார்.. நட்பு ஆரம்பமாகி.. அது கள்ளக்காதலாக உருவானது!

கள்ள ஜோடி

கள்ள ஜோடி

இப்போது அந்த பெண்ணின் வீட்டுக்கு, ஏட்டு ராமர் அடிக்கடி போக ஆரம்பித்தார்.. போலீஸ்காரர் அடிக்கடி வந்து போவதை அந்த கிராம மக்கள் அடிக்கடி பார்த்தனர்.. அப்படித்தான் சனிக்கிழமை ராத்திரியும் ஏட்டு வந்தார்.. கதவை பூட்டிக் கொண்டு உள்ளே காதல் ஜோடி இருக்க.. கிராம மக்கள் எல்லாரும் சேர்ந்து கதவை வெளிப்பக்கமாக பூட்டு போட்டு பூட்டினர்.

ராமர் ஆவேசம்

ராமர் ஆவேசம்

கதவை பூட்டும் சத்தம் கேட்டதும், உள்ளே ஜோடிக்கு அள்ளு கிளம்பியது.. இதனால் 2 பேரும் தவித்தனர்.. கொஞ்ச நேரத்தில் கிராம மக்கள் தகவல் அளிக்க, போலீசாரும் வந்துவிட்டனர்..கதவை திறந்து பார்த்தால் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் ஏட்டு ராமர் இருந்தார்.. அவரை பொதுமக்களில் சிலர் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றனர்.. அதை பார்த்தும் ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் ராமர் கொந்தளித்துவிட்டார்... இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

முற்றுகை

முற்றுகை

பிறகு ராமரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து முகம்மது ஜக்ரியாவின் சகோதரி புகார் தர முன்வந்தும், அந்த புகாரை போலீசார் வாங்கவில்லை என்று தெரிகிறது.. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திரரடு ஸ்டேஷனை முற்றுகையிட முயன்றனர்.. அதற்குள் அதிகாரிகள் விரைந்து வந்து இரு தரப்பினரையும் அழைத்து பேசினார். ராமர் சம்பந்தமாக வந்த புகாரை பதிவு செய்ய உத்தரவிட்டனர்.. அத்துடன் ராமரை சஸ்பெண்ட் செய்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. ராமருக்கு கல்யாணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனராம்!!

English summary
near thuraiyur, a policeman suspended due to his illegal activities in trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X