• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

'பிட்டு' கிடைச்சா போதுமே! என்னம்மா இப்படி பண்றீங்களே! அடுக்கடுக்காய் அள்ளி விடும் திருச்சி சாதனா..!

Google Oneindia Tamil News

திருச்சி : தன்னைப் பற்றி ஒரு பிட்டு கிடைத்தால்கூட ஒன்றை ஒன்பதாக ஆக்கி செய்திகள் வெளியிட்டு தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கவர்ச்சி காட்டி தற்போது அடக்கி வாசிக்கும் திருச்சி சாதனா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் திருச்சி சாதனா. கடந்த 2 ஆண்டுகளுகு முன்னர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இவர், கொரோனா காலத்தில் அது தடை செய்யப்பட்ட பின்னர் ஃபேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ், யூட்யூப் என வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களாக அவரது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளிக்கும் வீடியோவை பதிவிட்டதோடு, ஃபேஸ்புக் லைவ்வில் அறைகுறை ஆடைகளோடு, ஆபாசமாக பேசி தொடர்ச்சியாக வீடியோ போட்டு வந்தார்.

ரெண்டு நாள் வாலை சுருட்டி பம்மிய திருச்சி சாதனா.. இன்று எரிமலையாக வெடித்து வீடியோ.. ச்சீ என்ன இது? ரெண்டு நாள் வாலை சுருட்டி பம்மிய திருச்சி சாதனா.. இன்று எரிமலையாக வெடித்து வீடியோ.. ச்சீ என்ன இது?

திருச்சி சாதனா

திருச்சி சாதனா

அதிலும், கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திருச்சி சாதனா ஆபாசமாக பேசிய யூட்யூப்பில் வெளியிட்ட சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்றது. இந்த நிலையில் நச்சலூர் கிராம மக்கள் குளித்தலை காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளனர்.அதில் தங்கள் கிராமத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ஆபாச வீடியோக்களை வெளியிடும் சாதனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ன்று குறிப்பிட்டிருந்தனர்.

மன்னிப்பு வீடியோ

மன்னிப்பு வீடியோ

இதனையடுத்து திருச்சி சாதனாவை குளித்தலை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், விசாரணை நடத்தி தனிப்பட்ட முறையில் அறிவுரைகளை வழங்கியுள்ளனர். உடனே 'நான் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை வெளியிட மாட்டேன்' என்று எழுத்துபூர்வமாக உறுதியளித்த சாதனா, அதையே பேசி ஒரு வீடியோவாகவும் வெளியிட்டார். இரண்டு நாட்கள் பொறுமையாக இருந்த அவர், மீண்டும் சேலை கட்டி நடனமாடி வீடியோ வெளியிட்டார். ஆனால் ஆபாசம் மட்டும் மிஸ்ஸானது.

மீண்டும் ஆபாசம்

மீண்டும் ஆபாசம்

இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள திருச்சி சாதன தன்னைப் பற்றி ஒரு பிட்டு கிடைத்தால்கூட ஒன்றை ஒன்பதாக ஆக்கி செய்திகள் வெளியிட்டு தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். அந்த வீடியோவில் பேசும் திருச்சி சாதனா, "வணக்கம் நான் திருச்சி சாதனா பேசுகிறேன், நியூ சேனல்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். சரியான தகவல் இல்லாம என்ன பத்தி செய்தி போடாதீங்க, என்ன ஏதுன்னு விபரமே தெரியாமல் எதுக்கு அப்படி செய்தி போடுறீங்க.

கவர்ச்சி வீடியோ

ஒன்னுனா ஒன்பதுனு நியூஸ்ல போட்டுவிட்டு ஏன் இப்படி இருக்கீங்க. இதைப் பார்த்துவிட்டு ஒவ்வொருத்தராக எனக்கு போன் செய்து விசாரிக்கிறார்கள். என்னால போன் எடுக்க முடியல. முடியல சாமி. ஒரு பிட்டு கிடைச்சாலும் ஃபுல் பண்ணுறீங்களே.எத்தனை செய்தி சேனல் என பல செய்தி சானல்களின் பெயர்களை குறிப்பிட்டு அய்யோ சாமி என்னால சுத்தமா முடியல" என பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் கமெண்டில் பலரும் திருச்சி சாதனாவை படு கேவலமாக விமர்சித்து வருகின்றனர்.

English summary
Trichy Sadhana has complained that even if gets a bit about herself, somebody tries to tarnish her name by publishing big news
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X