திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ. 72 லட்சம் பக்தர்கள் காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் ரூ.72 லட்சத்து 70 ஆயிரமும், ஒன்றே கால் கிலோ தங்கம், 2 கிலோ 622 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.72 லட்சத்து 70 ஆயிரத்து 552 காணிக்கையாக வசூல் ஆகியுள்ளது. ஒன்றே கால் கிலோ தங்கம், 2 கிலோ 622 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணத்தை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாதம் இரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும். கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

Trichy Samayapuram Mariamman temple Rs. 72 lakh devotees donate

கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமார் தலைமையில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் அரியலூர் உதவி ஆணையர் கருணாநிதி, திருச்சி மலைக்கோட்டை உதவி ஆணையர் விஜயராணி, கோவில் மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கோவில் கண்காணிப்பாளர் நரசிம்மன் மற்றும் செயல் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனா்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்னகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்ன

அப்போது காணிக்கையாக ரூ. 72 லட்சத்து 70 ஆயிரத்து 552, 1 கிலோ 257 கிராம் தங்கம், 2 கிலோ 622 கிராம் வெள்ளி, 14 அயல்நாட்டு நோட்டுக கிடைக்கப் பெற்றது தெரியவந்தது. இதற்கு முன் இக் கோயிலில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி கடைசியாக கோயில் உண்டியல் எண்ணப்பட்டது. இத்தகவலை கோயிலின் இணை ஆணையா் கே.பி. அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

English summary
72 lakh 70 thousand 552 has been collected as a gift from the bill at the Trichy Samayapuram Mariamman temple. According to temple officials, only a quarter of a kilo of gold, 2 kg of 622 grams of silver and foreign currency were donated by the devotees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X