திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சி எஸ்பி திடீர் ஆய்வுக்கு போலீஸ் ஸ்டேஷன் போனார்.. 5 பேருக்கு ஆன் தி ஸ்பாட் டிரான்ஸ்பர்.. ஏன்?

Google Oneindia Tamil News

திருச்சி: இன்ஸ்பெக்டர் ஒருத்தர் திடீர் ஆய்வுக்கு ஒரு போலீஸ் ஸ்டேஷன் போனாராம்.. 5 பேரை ஆன் தி ஸ்பாட் டிரான்ஸ்பர் பண்ணிட்டாராம்.. ஏன்?

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு திடீரென கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து எஸ்பி ஜியாவுல் ஹக் இறங்கி ஸ்டேஷனுக்குள் வேகவேகமாக சென்றார்.

உள்ளே ஒரு பெண் போலீசும், ஆண் போலீசும் இருந்தனர். அதிகாரியை பார்த்ததும் தூக்கி வாரி போட்டது. அதிர்ச்சியிலேயே உறைந்து போய் ஒரு சல்யூட் வைத்தனர். ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை அங்கு காணோம்.

டேமேஜ் ஆகி வரும் அதிமுக இமேஜ்.. நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை பேச ஆள் இல்லாத அவலம்! டேமேஜ் ஆகி வரும் அதிமுக இமேஜ்.. நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை பேச ஆள் இல்லாத அவலம்!

அலர்ட்

அலர்ட்

இதனால் அவருக்கு ஒரு போன் போட்டு அலர்ட் பண்ண போனை எடுத்தார் அங்கிருந்த ஆண் போலீஸ். ஆனால் எஸ்பியோ.. யாரும் எதுவும் பேசக்கூடாது, எங்கியும் போன் பண்ணக்கூடாது என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டார்.

 5 பேர் இல்லை

5 பேர் இல்லை

ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருப்பவர் இம்மானுவேல் ராயப்பன், எஸ்.ஐ-யாக வேலை பார்ப்பவர் அய்யப்பன். ஏட்டுகளாக இருப்பவர்கள் ராஜா, சதீஷ்குமார். ரைட்டர் விஜயராகவன். இந்த 5 பேர் தான் அங்கு மிஸ்ஸிங்! அங்கிருந்த ஃபைல்களை எடுத்து புரட்டினார். கேஸ் விஷயமாக யாரும் வெளியில் செல்லவில்லை என்பதை உறுதிபடுத்தி கொண்டார்.

 எங்கே இருக்கீங்க?

எங்கே இருக்கீங்க?

பின்னர் தனது செல்போனில் ஒவ்வொருத்தருக்கும் போன் செய்து எங்கே போயிருக்கீங்க, என்ன செய்துட்டு இருக்கீங்க என்று தனித்தனியாக கேட்டார். அதற்கு அந்த 5 பேரும், கேஸ் விஷயமா வெளியே வந்திருப்பதாக புருடா விட்டார்கள்.

 திடீர் விசிட்

திடீர் விசிட்

அதற்கு எஸ்பியோ, "அப்படியா... நான் உங்க ஸ்டேஷனில்தான் இருக்கேன். கொஞ்சம் வர்றீங்களா" என்று கூப்பிட்டார். கொஞ்ச நேரத்தில் எஸ் ஆன 5 பேரும் ஆஜர்! இப்படி எஸ்பி ஆய்வுக்கு வர காரணம், இந்த 5 பேர் பற்றியும் ஏற்கனவே இவருக்கு நிறைய புகார்கள் போய் இருக்காம். அது உண்மையான்னு கண்டுபிடிக்கவே திடீர் விசிட் அடித்துள்ளார்.

 கூண்டோடு மாற்றம்

கூண்டோடு மாற்றம்

அடித்து பிடித்து வந்த அந்த 5 பேரிடம் நடத்திய விசாரணையில் உண்மையிலேயே எல்லாருமே அவங்கவங்க வீட்டில்தான் இருந்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது. அப்பறம் என்ன.. 5 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த போலீஸ் நிலையத்தின் பணிகளை கூடுதலாக கவனிக்கும்படி அருகில் உள்ள போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்.

English summary
Trichy District SP Zia Ul Hag sudden examin in Mannachanallur Police Station and 5 person has transferred
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X