திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் கோளாறு.. 167 பயணிகள் உயிர் தப்பினார்கள்

Google Oneindia Tamil News

திருச்சி: 167 பயணிகளுடன் திருச்சியிலிருந்து மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் 20 மணி நேரம் தாமதாக புறப்பட்டுச் சென்றது.

கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஏா் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இதே விமானத்தில் கோலாலம்பூா் செல்ல பதிவு செய்திருந்த 167 பயணிகள் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு அமர வைக்கப்பட்டார்கள்

Trichy to Malaysia flight landing after technical problem, 167 passengers safe

விமானம் ஒடு தளப்பாதைக்கு சென்று, மேலே பறக்க முயற்சித்த போது தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். அத்துடன் விமானத்தை ஏரோ பிரிட்ஜ் பகுதிக்கு கொண்டு வந்தார்.

தகவலறிந்து வந்த பொறியாளா்கள் குழுவினா், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.எனினும் என்ஜின் பகுதியில் ஆயில் கசிவு காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை உடனடியாக சரி செய்வதில் சிக்கல் நீடித்தது.

கடல் விழுங்கிய சோழர்கால பூம்புகார்.. டிஜிட்டலில் மறு உருவாக்கம்.. அறிவியல் தொழில்நுட்ப துறை அசத்தல்கடல் விழுங்கிய சோழர்கால பூம்புகார்.. டிஜிட்டலில் மறு உருவாக்கம்.. அறிவியல் தொழில்நுட்ப துறை அசத்தல்

இதையடுத்து மலேசியாவில் இருந்து உதிரிப்பாகம் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. 20 மணி நேரத் தாமதத்துக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு 143 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. இதற்கிடையே கோளாறு காரணமாக பயணிகள் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனா். சிலா் அடுத்தடுத்த விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ளவா்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டு, வேறு தேதிகளில் முன்பதிவு செய்துக் கொண்டனா். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக கோளாறு காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

English summary
Trichy to Malaysia flight landing after technical problem, 167 passengers safe, flight gone after 20 hours late
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X