திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எல்லாருமே ஏமாத்தறாங்க.. என்ன பண்றதுன்னே தெரியல".. எலிபேஸ்டை சாப்பிட்டு பெண் போலீஸ் தற்கொலை, வீடியோ!

எலி பேஸ்ட்டை சாப்பிட்டு பெண் போலீஸ் தற்கொலை செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

திருச்சி: "என்ன பண்றதுன்னே தெரியல.. எல்லாருமே என்னை ஏமாத்தறாங்க" என்று சொல்லியபடியே, கூல்டிரிங்கிஸ்ல் எலி பேஸ்ட்டை கலந்து குடிக்கும் பெண் போலீசின் தற்கொலை வீடியோ வெளியாகி பெரும பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Recommended Video

    எலி பேஸ்ட் சாப்பிட்டு பெண் போலீஸ் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை!

    திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி ஸ்டேஷனில் வேலை பார்த்து வந்தவர் பவானி.. 35 வயதாகிறது.. 2009-முதல் போலீஸாக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது. கணவன் பெயர் மணிவண்ணன். ஆனால் 6 மாசத்திலேயே கணவரை விட்டு பிரிந்துவிட்டார்.. அதனால் இந்த 10 வருஷமாக தனியாகதான் வாழ்ந்து வந்தார்.. இவருக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

    trichy woman police Bavani commits suicide, video

    கடந்த ஞாயிற்றுக்கிழமை, வேலை விஷயமாக கோவை வரை டூவீலரில் சென்றுள்ளார்.. ஆனால் மயங்கிய நிலையில் திருச்செங்கோடு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அவராகவே ஆஸ்பத்திரிக்கு சென்று தான் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக சொல்லி உள்ளார்.. இந்த விஷயம் அவரது வீட்டுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

    தகவலறிந்து பவானியின் சகோதரி விரைந்து வந்து, ஆம்புலன்ஸ் வைத்து மணப்பாறை அரசு ஆஸபத்திரியில் அனுமதித்தார்.. ஆனால் டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் பவானியை காப்பாற்ற முடியவில்லை.
    இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்..

    பவானியிடம் நிறைய பேர் கடன் வாங்கி இருந்தார்களாம்.. அவர்கள் யாருமே திருப்பி தரவில்லையாம்.. அந்த சோகத்தில் இருந்திருக்கிறார் பவானி என்று தகவல் வெளியானது.. கடனை திருப்பி செலுத்த முடியாமல் பலரும் தற்கொலை செய்து வரும் நிலையில், கொடுத்த காசை வாங்க முடியாமல் பவானி ஒரு போலீஸே உயிரிழந்தது அதிர்ச்சியை தந்தது.

    இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிப்புஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு

    இந்நிலையில், தற்போது இவரது தற்கொலை வீடியோ வெளியாகி உள்ளது.. அதில் பவானி, கூல்டிரிங்ஸ்-ல் எலி பேஸ்ட்டை கலக்குகிறார்.. பிறகு குடிக்கிறார்.. "2 பெண் போலீசாரிடம் தலா 8 லட்ச ரூபாய் தந்தேன்.. உதவின்னு கேட்டாங்க.. ஆனால் அவங்க பணத்தை திருப்பி தராமல் 2013ல் இருந்தே இழுத்தடிக்கின்றனர்.

    இது எனக்கு பெரிய கஷ்டம்.. இந்த சமயத்தில் எனக்கு 2 நாளைக்கு முன்னாடி திடீர்னு தலைவலி, ஜுரம் வந்துடுச்சு.. ஒருவேளை கொரோனாவா இருக்குமோன்னு பயம் வந்துடுச்சு.. என்ன பண்றதுண்ணே தெரியல. எல்லாரும் என்னை ஏமாத்துறாங்க,'' என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். பவானியின் இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    English summary
    trichy woman police Bavani commits suicide, video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X