திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண் எஸ்ஐ வீட்டில் கஞ்சா வியாபாரிக்கு என்ன வேலை.. டிஸ்மிஸ் செய்த கமிஷனர்.. திருச்சியில் அதிரடி

திருச்சி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

திருச்சி: பெண் எஸ்ஐ புவனேஸ்வரி வீட்டில், கஞ்சா வியாபாரிக்கு என்ன வேலை? வீட்டிலேயே ஒரு கஞ்சா வியாபாரியை பதுக்கி வைத்திருந்ததால்தான், பெண் போலீஸ் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.. இந்நிலையில் புவனேஸ்வரியை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார்

திருச்சி போதை பொருள் தடுப்புப்பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் புவனேஸ்வரி. 37 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது, ஆனால் கணவரை பிரிந்து வாழ்கிறார்.

 trichy woman police sub inspector dismissed for disorderly conduct

3 குழந்தைகள் இருக்கிறார்கள்.. இவர் திருச்சி பீமநகரில் போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி இருந்தார். கடந்த வருடம் ஜூலை மாதம் இவருடைய வீட்டில் கஞ்சா வியாபாரி ஒருவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனால் அவருடைய வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதன்படியே ஒருவர் பதுங்கி இருந்தார்.. அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதும், அவருடைய தம்பி ஏற்கனவே கஞ்சா வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியால் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.. சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியை போதைப்பொருள் தடுப்புப்பிரிவில் இருந்து திருச்சி மாநகரத்துக்கு இடமாற்றம் செய்து இவர் உத்தரவிட்டார். இதனிடையே, மாநகரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவரை கமிஷனர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்தே உத்தரவிட்டு விட்டார். மேலும் தங்கி இருக்கும் போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பையும் காலி செய்ய புவனேஸ்வரிக்கு அறிவுறுத்தப்பட்டது..

"ஜெகஜால" சந்துருஜி.. கட்டில், மெத்தை, ஏசி ரூம்கள், ஸ்பா.. பகீர் கிளப்பும் கோட்டக்குப்பம் ரகசியங்கள்

ஆனாலும் புவனேஸ்வரி தொடர்பான விசாரணை நடந்தபடியேதான் இருந்தது.. அந்த கஞ்சா வியாபாரி ஆந்திராவை சேர்ந்தவராம்.. கஞ்சா கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்து, கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்துள்ளார் புவனேஸ்வரி என்பதும் தெரியவந்துள்ளது.

அதேபோல, இதுவரை புவனேஸ்வரி தரப்பில் இருந்து போதிய விளக்கமும் எந்த குற்றச்சாட்டுக்கும் அளிக்கப்படவுமில்லை.. இதையடுத்து, அவரை, 'டிஸ்மிஸ்' செய்து, திருச்சி கமிஷனர் வரதராஜு உத்தரவிட்டுள்ளார். புவனேஸ்வரியை டிஸ்மிஸ் செய்தது போலீஸ் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
trichy woman police sub inspector dismissed for disorderly conduct
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X