திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பவித்ரா உறவினருடன் ஒன்றாக இருந்தார்.. மனைவி, மாமியாரை கழுத்தறுத்து கொன்ற இளைஞர் பரபர வாக்குமூலம்

Google Oneindia Tamil News

திருச்சி: உறவினருடன் மனைவி ஒன்றாக இருந்ததை பார்த்ததால், திட்டமிட்டு மனைவி, மாமியாரை கழுத்தறுத்து படுகொலை செய்தததாக திருச்சியில் கைதான இளைஞர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க 4 நாட்கள் நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில ஒரே நாளில் போலீசார் விசாரணை நடத்தி முடித்தனர். இதையடுமுத்து அவரை சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூரை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 35). இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 3 வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த ஆண்டு இவர்கள், திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர்தெருவில் ஒத்திக்கு வீடு பார்த்து குடி வந்திருகிறார்கள்.. கடந்த வாரம் பவித்ராவின் தாயார் கலைச்செல்வி தனது மகள் மற்றும் பேத்தியை பார்ப்பதற்காக பெரிய மிளகுபாறையில் உள்ள வீட்டுக்கு வந்திருக்கிறார்.

 "நொறுங்கும் இதயம்".. நாட்டை பதற வைத்த உ.பி இளம்பெண் கூட்டு பலாத்காரம்..டிவிட்டரில் கொந்தளிப்பு

கழுத்தை அறுத்து படுகொலை

கழுத்தை அறுத்து படுகொலை

இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த உலகநாதன் கத்தியால் பவித்ராவையும், அதை தடுக்கச்சென்ற மாமியார் கலைச்செல்வியையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்திருக்கிறார். பின்னர் அதிகாலை 4 மணி அளவில் குழந்தை கனிஷ்காவை தூக்கி கொண்டு வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டுபோட்டு பூட்டி விட்டு தப்பி சென்றுவிட்டார்.

நண்பர்களும் கைது

நண்பர்களும் கைது

இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதிகாலை 4 மணியளவில் உலகநாதன் குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றதை பார்த்ததாக தெரிவித்தார்கள். இதையடுத்து குழந்தையுடன் தலைமறைவான உலகநாதனை பிடிக்க 3 தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் உலகநாதன் கடந்த 25ம் தேதி குடந்தை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து உலக நாதனின் நண்பர்கள் சர்மா,, சத்யராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

4 நாட்கள் கஸ்டடி

4 நாட்கள் கஸ்டடி

இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க உலகநாதனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், சிறையில் உள்ள உலகநாதனை ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து தஞ்சை கிளை சிறையில் இருந்த உலகநாதனை ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின்னர் 4 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி கொடுத்து உத்தரவிட்டார்.

பவித்ராவுக்கு பழக்கம்

பவித்ராவுக்கு பழக்கம்

இதையடுத்து உதவி கமிஷ்னர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் உலக நாதனை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது போலீசிடம் உலகநாதன் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும், பெரம்பலூரில் உள்ள பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவருடன் பல மணி நேரம் பேசி வந்தேன். இதேபோல் பவித்ராவுக்கு அவரது உறவினருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் பேசிவந்தார்.

ஒன்றாக பார்த்தேன்

ஒன்றாக பார்த்தேன்

இதனால் எங்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனிடையே பவித்ராவையும் உறவினரையும் ஒன்றாக பார்த்ததால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக வாள் ஒன்றை வாங்கி வீட்டில் மறைத்து வைத்தேன். கடந்த 23ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் மனைவி மாமியார் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இருரையும் தனித்தனியாக வாயை பொத்தி கழுத்தை அறுத்து கொலை செய்தேன். பின்னர் 1.30 மணி அளவில் குழந்தையை தூக்கிக்கொண்டு நண்பர்கள் தயாராக வைத்திருந்த காரில் ஏறி தப்பினேன் என்றார். இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய வாள், கார், பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் விசாரணை முடிந்ததால் உலகநாதனை போலீசார் சிறையில் அடைத்தனர். உலகநாதனுடன் அவரது நண்பர்கள் சர்மா, சத்யராஜ் ஆகியோரையும் சிறையில் அடைத்தனர்.

English summary
trichy youth ulaganathan Confession in police. i was killed wife and mother-in-law over my wife's extra love with her relation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X