திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரதன் என்று விளம்பரப்படுத்துறாங்க...ஆனால் சேர்ந்து இருப்பதோ ராவணனிடம்... சொல்வது டி.டி.வி. தினகரன்!

Google Oneindia Tamil News

திருச்சி: சசிகலாவுக்கு கொடுத்த வரவேற்பை பார்த்து இருப்பீர்கள்.அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதுதான் எங்களின் பிரதான நோக்கம் என்று திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறினார்.

Recommended Video

    திருச்சி: ஓ.பி.எஸ் அமைதி காத்து இருந்தால்... மீண்டும் பரதனாகி இருக்கலாம்... டி.டி.வி தினகரன் பேச்சு!

    பரதன் என்று தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளும் ஓ பன்னீர்செல்வம் ராவணனிடம் சென்று சேர்ந்து விட்டார். அப்படி சேராமல் இருந்திருந்தால்அவர் பிப்ரவரியில் மீண்டும் பரதனாகி இருக்கலாம் என்றும் அவர் பேசினார்.

    வரும் சட்ட மன்ற தேர்தலில், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று சாதனை புரிந்ததை போல நாங்கள் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.

    அ.தி.மு.க.வை மீட்டெடுக்க வேண்டும்

    அ.தி.மு.க.வை மீட்டெடுக்க வேண்டும்

    அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சி திருவானைக்காவலில் நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது:- சசிகலாவுக்கு கொடுத்த வரவேற்பை பார்த்து இருப்பீர்கள்.அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதுதான் எங்களின் பிரதான நோக்கம். தி.மு.க.தப்பி தவறி ஆட்சி அமைத்தால் கூட நாங்கள் கொள்கையோடு இருப்போம் ஆனால் முதல்வர் மற்றும் அவரோடு இருப்பவர்கள் இருக்கும் இடம் வேறொரு இடமாக இருக்கும். அதை அனைவரும் பார்க்க தான் போகிறார்கள்.

    ஓ பன்னீர்செல்வம் ராவணனிடம் சேர்ந்து விட்டார்

    ஓ பன்னீர்செல்வம் ராவணனிடம் சேர்ந்து விட்டார்

    தமிழக அரசு வெற்றி நடை போடவில்லை. இது தள்ளாடும் அரசாகத் தான் உள்ளது. மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு பொய் சேரவில்லை. அதனால்தான் விளம்பரம் செய்கிறார்கள். பரதன் என்று தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளும் ஓ பன்னீர்செல்வம் ராவணனிடம் சென்று சேர்ந்து விட்டார். அப்படி சேராமல் இருந்திருந்தால்அவர் பிப்ரவரியில் மீண்டும் பரதனாகி இருக்கலாம்.

    நிச்சயம் ஆட்சிக்கு வருவோம்

    நிச்சயம் ஆட்சிக்கு வருவோம்

    மத்திய பட்ஜெட்டில் கொஞ்சம் நன்மைகளும் நிறைய தீமைகள் உள்ளன. அதே போல அ.தி.மு.க அரசும் தப்பித்தவறி ஒரு சில நன்மைகளை செய்திருக்கலாம். அது ஜெயலலிதா வின் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட திட்டங்களாக,110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டவைகளாக இருக்கும். கடந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் 15 விழுக்காடு வாக்குகளை பெற்றோம். வரும் சட்ட மன்ற தேர்தலில், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று சாதனை புரிந்ததை போல நாங்கள் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம்.

    ஸ்லீப்பெர் செல் யார்?

    ஸ்லீப்பெர் செல் யார்?

    தி.மு.க தப்பி தவறி ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் அரசியல் பணி தொடரும். ஸ்லீப்பெர் செல் என்பவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ மட்டுமல்ல. அ.தி.மு.க வின் உண்மை தொண்டர்கள்தான் ஸ்லீப்பெர் செல்கள். சசிகலாவை வரவேற்றபோது லீப்பெர் செல்களை மக்கள் பார்த்தார்கள். உதாரணமாக சசிகலாவை காரில் அழைத்து வந்த சம்மங்கி,தட்ஷணாமூர்த்தி உள்ளிட்டவர்கள் ஸ்லீபெர் செல்கள் என்று டி.டி.வி தினகரன் கூறினார்.

    English summary
    In Trichy, TTV Dinakaran said, "Our main objective is to revive the AIADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X