திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா காலில் விழுந்தது இயற்கை.. ஆனால் எடப்பாடி காலில் விழுவது செயற்கை.. தினகரன்

Google Oneindia Tamil News

திருச்சி: ஜெயலலிதா காலில் தொண்டர்களும் நிர்வாகிகளும் விழுந்தது இயற்கை என்றும் எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுவது செயற்கை என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

திருச்சியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

குடியரசுத் தினம் எப்போது? இன்று நடந்த குரூப் 4 தேர்வில் 5 கேள்விகள் தவறுகள் இருந்ததாக தகவல்குடியரசுத் தினம் எப்போது? இன்று நடந்த குரூப் 4 தேர்வில் 5 கேள்விகள் தவறுகள் இருந்ததாக தகவல்

விரும்பவில்லை

விரும்பவில்லை

அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் கவர்னராக நியமிப்பது சரியான நடவடிக்கை இல்லை. தமிழிசை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் நான் இதனை விமர்சிக்க விரும்பவில்லை. உலகளவில் பொருளாதார மந்த நிலை உள்ளது.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

பழனிச்சாமி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது, ஏதோ எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாங்க என்று சொல்வது போல்தான் இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் காலில் நிர்வாகிகள் தொண்டர்கள் விழுந்து ஆசிபெற்றனர்.

புதிய நிர்வாகிகள்

புதிய நிர்வாகிகள்

அது அவர் மீது வைத்திருந்த மரியாதைக்காக அப்படி செய்தனர். அது இயற்கையாக இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி காலில் சிலர் விழுவது மிகவும் செயற்கையாக உள்ளது. அமமுக கட்சி வளர்ச்சிக்காக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விலகி

விலகி

தங்கதமிழ்ச்செல்வனுக்கு திமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இரவு 11 மணிக்கு மேல் பேசியதால்தான் அமமுகவில் பிரச்சினை ஏற்பட்டது. அவரும் விலகி சென்றார். இனி திமுகவிலாவது அவர் இரவு 11 மணிக்கு மேல் யாருடனும் பேசாமல் இருப்பதை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

English summary
TTV Dinakaran says that fell on the feet of Jayalalitha was natural, but the same is doing to Edappadi Palanisamy is very artificial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X