திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரச மரம்னுதான் எல்லாரும் நினைச்சாங்க.. அப்புறம்தான் தெரிந்தது அது போதை மரமென்று.. மீன்வியாபாரி கைது

திருச்சி மார்கெட் பகுதியில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருச்சி மார்க்கெட்டில் கஞ்சா செடி வளர்த்தவர்கள் கைது- வீடியோ

    திருச்சி: முதலில் அது ஒரு சாதாரண அரச மரம் என்றுதான் மக்கள் நினைத்தார்கள்.. அப்பறம்தான் தெரிந்தது அது ஒரு விவகாரமான அரச மரம் என்று!

    திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செங்குளம் காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் ஒன்று உள்ளது. ரொம்ப ஃபேமஸ் ஆன மார்க்கெட் இது. காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் என ஏராளமான கடைகள் இங்கு உள்ளன.

    இந்த மார்க்கெட்டின் வளாகத்தில் ஒரு அரசமரம் உள்ளது. இந்த மரத்தின் அருகே கஞ்சா செடி நட்டு வளர்க்கப்பட்டு வருவதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கும், தனிப்படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

    அனாமிகாவுக்கு நவீன் குடுத்த புடவை .. அது எப்படி அனிதாகிட்ட போச்சு? அனாமிகாவுக்கு நவீன் குடுத்த புடவை .. அது எப்படி அனிதாகிட்ட போச்சு?

    தெர்மாகோல்

    தெர்மாகோல்

    இதையடுத்து போலீசார் மார்கெட்டிற்கு விரைந்து சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அரச மரத்தின் அடிப்பகுதியில் ஒரு செடி இருந்தது. அந்த செடியை தெர்மாகோல் போட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் தெர்மாகோலை அகற்றி பார்த்தால்.. அது கஞ்சா செடி!

    கஞ்சா செடிகள்

    கஞ்சா செடிகள்

    இதையடுத்து அதிரடி விசாரணை மார்க்கெட்டிலேயே ஆரம்பமானது. அப்போதுதான் தெரிந்தது, மார்க்கெட்டில் உள்ள பாத்ரூம் அருகே இன்னொரு கஞ்சா செடி இருப்பது. இதையடுத்து அந்த 2 கஞ்சா செடிகளையும் போலீசார் பறித்து அப்புறப்படுத்தினர்.

    மீன் வியாபாரி

    மீன் வியாபாரி

    அதே மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வரும் சாகுல்அமீதுதான் அந்த கஞ்சா செடி ஓனர் என தெரியவந்தது. இவருக்கு வயது 36. இவருடன் அதே மார்க்கெட்டில் வேலை செய்து வரும் சக்திவேல் என்பவரும் உடந்தை. இதையடுத்து 2 பேரையும் போலீசார் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.

    அதிரடி விவரங்கள்

    அதிரடி விவரங்கள்

    முதலில் இந்த கஞ்சா செடியை வளர்ப்பதற்கான விதையை இவர்கள் எங்கிருந்து வாங்கி இருப்பார்கள்? இதே தொழிலில் ஈடுபட்டு வருபவர்களிடம் இருந்து வாங்கியிருப்பார்களா? இது மாதிரி கஞ்சா செடியை எவ்வளவு நாட்களாக வளர்த்து வருகிறார்கள்? இவங்க 2 பேர் மட்டும்தான் கஞ்சா விற்பனை தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்களா? வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு இருக்கா என்ற அதிரடி விவரங்களை திரட்டி வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிர்ச்சி

    பொதுமக்கள் அதிர்ச்சி

    "ஜன நடமாட்டம் மிகுந்த மார்க்கெட்டில் கஞ்சா செடியை நட்டு வைக்க எவ்வளவு தைரியம் இருக்கும்? இவ்வளவு நாளா இங்கேயே வந்து காய்கறி வாங்கிட்டு போறோம்.. இந்த விஷயம் நமக்கு தெரியாம போச்சே" என அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    English summary
    2 people including Fisherman who planted cannabis plant in the Trichy Market and were arrested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X