திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சியிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்ட வஸ்திரங்கள்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு கொண்டு சென்ற பட்டு வஸ்திரங்கள் ஏழுமலையான் கோயில் தேவஸ்தான அறங்காவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் திருப்பதி ஏழுமலையானுக்கு தேவஸ்தான ஆண்டு வரவு செலவுகளைச் சமர்ப்பிக்கும் உற்சவமான ஆனி வார ஆஸ்தானம் நேற்று நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்படுவதற்கு முன்பு கோயில் ஆண்டு கணக்கு வழக்குகள் அனைத்தும் ஆனி மாத இறுதி நாளன்று ஏழுமலையான் சன்னிதி முன் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.

 Vasthirams was given to Tirupati Devasthanams by Trichy Srirangam

ஆடி மாத முதல் நாளன்று புதிய கணக்கு தொடங்கப்பட்டு அந்த நாளில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து வரும் பட்டு வஸ்திரங்களை ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பர். அதன்படி ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர்கள் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பட்டு வஸ்திரங்களை இன்று காலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் ஆகியோரிடம்ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் சமர்ப்பித்தார்.

 Vasthirams was given to Tirupati Devasthanams by Trichy Srirangam

இந்த நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர்கள் ரங்காச்சாரி, வேணுசீனிவாசன், கவிதா ஜெகதீசன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்துக்களை அரவணைப்பது திமுக.. கறுப்பர் கூட்டத்தோடு தொடர்புபடுத்துவது அற்பத்தனம்- ஆர்எஸ் பாரதி ஆவசேம்இந்துக்களை அரவணைப்பது திமுக.. கறுப்பர் கூட்டத்தோடு தொடர்புபடுத்துவது அற்பத்தனம்- ஆர்எஸ் பாரதி ஆவசேம்

 Vasthirams was given to Tirupati Devasthanams by Trichy Srirangam
English summary
Vasthirams was given to Tirupati Devasthanams by Trichy SriRangam Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X