திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏங்க தண்ணீரை அதிமுக ஒன்னும் உற்பத்தி செய்யலை.. மழை பெய்தா தன்னால சரியாகும்.. பம்மும் விஜயபிரபாகரன்

Google Oneindia Tamil News

திருச்சி: தண்ணீரை அதிமுக உற்பத்தி செய்யவில்லை. எனவே மழை பெய்தால் தண்ணீர் பிரச்சினை சரியாகிவிடும் என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த பிரச்சினையை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆகும்.

தண்ணீர் பிரச்சினைகளுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சிகரமான விஷயம் தேமுதிகவில் நடந்துள்ளது. அதாவது தேமுதிக கட்சி பணிகளை நிர்வாகம் செய்வதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்துக்கு பணம் தேவைப்பட்டது. இதனிடையே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டிய சூழல் எழுந்தது.

அடகு வைத்து கடன்

அடகு வைத்து கடன்

இந்த நிலையில் கட்சிபணிகளுக்காகவும் சிகிச்சைக்காகவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மவுண்ட் ரோடு கிளையில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி நிலத்தை அடகு வைத்து கடன் பெற்றார்.

சினிமா வட்டாரத்தில்

சினிமா வட்டாரத்தில்

வாங்கிய கடனை திரும்பி செலுத்தாததால் விஜயகாந்த்தின் கல்லூரி மற்றும் வீடுகள் ஏலம் விடப்படும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாளிதழில் வெளியிட்டது. இது தேமுதிக வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடமானம்

அடமானம்

இந்த நிலையில் இதுகுறித்து மருங்காபுரி வந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறுகையில் ஊழல் செய்து நாங்கள் கடனாளி ஆகவில்லை. சொத்துகளை அடமானம் வைத்துதான் கடன் பெற்றோம்.

மழை வந்தால் சரியாய்டும்

மழை வந்தால் சரியாய்டும்

ஆனால் கடனை அடைக்க போதிய அவகாசம் தரவில்லை. எனினும் கடன் பிரச்சினை சரி செய்யப்படும். தண்ணீரை அதிமுக உற்பத்தி செய்யவில்லை. மழை வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றார் விஜய பிரபாகரன்.

English summary
Vijayakanth's son Vijaya Prabhakaran says that Water is not produced by ADMK. If it rains water crisis will be solved itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X