திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுப் பல்லு.. பிளாஸ்டிக் சர்ஜரி.. ஆளே பளபளப்பாக மாறிய திருவாரூர் திருடன் முருகன்.. அதிர்ந்த போலீஸ்

முருகனிடம் முழு விசாரணையை போலீசார் நடத்துவார்களா என்பது சந்தேகம்தான்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jewellery Theft | லலிதா ஜுவல்லரி வழக்கில் முக்கிய திருடன் முருகன் பெங்களூர் கோர்ட்டில் சரண்!

    திருச்சி: சங்கதி தெரியுமா.. கேங் லீடர் முருகன் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டானாம். ஆனா, இங்க சரணடையாமல், பெங்களூர் கோர்ட்டில் ஏன் இந்த கொள்ளையன் சரணடைய வேண்டும்?

    லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளை நடத்த, ஒரு வீட்டை வாடகைக்கு பிடிச்சு 2 மாசம் பிளான் போட்டது நாட்டின் மிக முக்கிய குற்றவாளி முருகன்தான்! அதனால் தமிழகம் மட்டுமில்லாமல், பெங்களூரிலும் போலீசார் முருகனை தேடி வந்தே இருந்தனர்.

    முருகனை போலீசார் தேடி வந்த நிலையில் கண்ணில் சிக்காமல் போனதற்கு அவனது தோற்ற மாற்றமும் ஒரு காரணம் என்கிறார்கள். முருகனுக்கு எய்ட்ஸ் வந்து 5 வருடம் ஆகிறதாம். இப்போது உடம்பெல்லாம் மெலிந்து, பல் கொட்டி.. தோற்றமே மாறியது. ஆனால் போன வருஷம் முருகன் தன் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக சொல்கிறார்கள்.

    காரணம்

    காரணம்

    3 பல்லும் மாற்றி பல்செட் போட்டுள்ளார்களாம். அதனால், பழைய முருகனின் முகம் போல இப்போது இல்லை.. ஆள் அடையாளமும் தெரியவில்லை. அதனால் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவ இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

    நிலுவை

    நிலுவை

    கொள்ளையடித்த மறுநாளே வீட்டை காலி செய்துவிட்டான். ஏற்கனவே இங்குதான் அதாவது பெங்களூரு பானசவாடி ஸ்டேஷனில் முருகன் மீது 83 கேஸ்கள் நிலுவையில் இருப்பதாக சொல்கிறார்கள். எனினும் இப்போது, அங்கேதான் போய் சரணடைந்துள்ளார். இதனால் தமிழக போலீசார் தங்கள் கஸ்டடியில் இனி முருகனை எடுத்து விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி உள்ளது.

    சரண்டர்

    சரண்டர்

    இப்படி சரண்டர் ஆகிவிடுவதற்கு முன்னமேயே முருகனை கைது செய்து விசாரித்துவிட வேண்டும் என்றுதான் நம் போலீசார் அதி தீவிரமாக செயல்பட்டனர். அப்போதுதான் தங்கள் பாணி விசாரணையை கையில் எடுத்து, முக்கால்வாசி விஷயத்தை போலீசாரால் வாங்கிவிட முடியும். ஆனால், சரண் ஆகிவிட்டால், கோர்ட் கட்டளைபடிதான் விசாரணையின் போக்கு இருக்கும். அதனால், தங்கள் பாணி விசாரணையை தமிழக போலீசார் கையாள முடியுமா என்பது சந்தேகம்தான். இதில், பெங்களூரு கோர்ட்டில் முருகன் சரணடைந்தது நம் போலீசாருக்கு மற்றொரு ஏமாற்றமே.

    துப்பு

    துப்பு

    அது மட்டுமில்லை.. முருகன் பெங்களூருவில் பதுங்கி இருக்கலாம் என்று நம் போலீசாருக்கு ஒரு துப்பு அன்றே கிடைத்திருக்கிறது. அதன்படியே அங்கு சென்று தீவிர வேட்டை நடத்தியும், முருகனை கண்டுபிடிக்க முடியவில்லை.இதற்கு, ஒரு சில பெங்களூருபோலீசாரே முருகனுக்கு பதுங்க உதவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர்கள் மட்டும் நமக்கு உதவியிருந்தால், முருகனை என்னைக்கோ கைது செய்து, தமிழக போலீசாரின் மாஸ் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கும். இந்த விஷயத்திலும் ஏமாற்றமே!

    நம் போலீஸ்

    நம் போலீஸ்

    இருந்தாலும், முருகனின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நம் போலீசார் தூக்கிடவும், விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துவிடவும்தான் வேறு வழியில்லாமல் சரண்டர் என்ற முடிவுக்கு முருகன் வந்திருப்பதாக கருதுகிறார்கள். ஆனாலும் நம் போலீசார் விட்டுவிடுவார்களா என்ன.. எப்படியும் ஒட்டுமொத்த விஷயத்தையும் முருகனிடம் கறந்து.. உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தே தீருவார்கள்!

    English summary
    It is expected that the police will soon bring Murugan to Tamil Nadu and investigate him in Lalitha Jewellery theft case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X