• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஷவர்மா மீது மக்களுக்கு ஏன் மோகம்? அப்படி என்ன ருசி அதில்! விவரிக்கும் அரேபிய உணவு வகை உணவக நிறுவனர்!

Google Oneindia Tamil News

திருச்சி: ஷவர்மாவை பொறுத்தவரை குறைந்த விலையில் அதிக புரதச் சத்துக்கள் அடங்கிருப்பதால் அதனை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதாக கூறுகிறார் அரேபிய உணவு வகை உணவக நிறுவனர் அப்துல் வாசிஹ்.

வெளியிடங்களில் சாப்பிடுவதற்கு முன்னர் உணவகங்களின் தரத்தையும், அங்கு பின்பற்றப்படும் தூய்மையையும் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற டிப்ஸ்களையும் வழங்குகிறார்.

இதனிடையே ஷவர்மாவை மையமாக வைத்து கடந்த சில நாட்களாக வட்டமடிக்கும் சர்ச்சைகள் குறித்து நாம் அவரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது;

EXCLUSIVE: ஷவர்மா.. விளம்பரத்துக்காக ரெய்டு! வீணாக ஹோட்டல்கள் பெயர் கெடுகிறது: ஹோட்டல் சங்க செயலாளர்EXCLUSIVE: ஷவர்மா.. விளம்பரத்துக்காக ரெய்டு! வீணாக ஹோட்டல்கள் பெயர் கெடுகிறது: ஹோட்டல் சங்க செயலாளர்

ஷவர்மா உணவு

ஷவர்மா உணவு

''ஷவர்மாவை பொறுத்தவரை இது ஒரு அரேபிய உணவு வகை. அங்கிருந்து தான் இது உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்தியாவை பொறுத்தவரை முதலில் கேரளாவில் ஷவர்மா அறிமுகமாகி இன்று நாடு முழுவதும் அதன் விற்பனை பரந்துவிரிந்துள்ளது.
எங்க கடையில் நாளொன்றுக்கு 35 கிலோ முதல் 40 கிலோ கோழிக்கறிகள் இதற்காக பயன்படுத்துகிறோம். எல்லாமே அன்றைய தினமே விற்றுத்தீர்ந்து விடுகிறது.''

 விற்காத கடைகள்

விற்காத கடைகள்

''தினமும் ஷவர்மா விற்றுத்தீர்கிற கடைகளில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
ஏனென்றால் நாள்தோறும் தினமும் பிரஷ்ஷாக கறிகள் பயன்படுத்துவார்கள். எங்க கடையை பொறுத்தவரை ஷவர்மா செய்வதற்கான பிராசஸிங் நண்பகல் 12 மணி முதல்
மதியம் 1 மணிக்கு தொடங்குவோம். அப்போது தான் கறியில் மசாலா பிடிக்க சரியாக இருக்கும். இரவுக்குள் மொத்தமும் தீர்ந்துவிடும். இதனை இந்தளவு மக்கள் விரும்பி வாங்கி சாப்பிட காரணம் குறைந்த விலையில் அதிக புரதச் சத்து இருப்பதே ஆகும்.''

எதிர்பாராத நிகழ்வு

எதிர்பாராத நிகழ்வு

''கேரளாவிலும், தஞ்சை மாவட்டத்திலும் ஷவர்மா சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக ஊடகங்களில் அறிந்தேன். இது ஒரு துரதரிஷ்டவசமான நிகழ்வு.
இந்த நிகழ்வை காரணம் கூறி ஒட்டுமொத்தமாக ஷவர்மா என்ற உணவையே புறக்கணிக்கத் தேவையில்லை. ஆனால் இது போன்ற உணவு வகைகளை சாப்பிடச் செல்வதற்கு முன்னர், உணவகங்களின் தரம், தூய்மை, நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.''

  Shawarma சாப்பிடும்போது இதை கவனிங்க | Dr. R. Kannaiyan, MD | Oneindia Tamill
  ஐயம் தேவையில்லை

  ஐயம் தேவையில்லை

  ''ஷவர்மா சாப்பிட்டால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு விடுமோ என மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் சரியான இடத்தில் வாங்கி சாப்பிட வேண்டும். கடை
  ஹைஜீனிக்காக இருக்கிறதா என மட்டும் பார்க்காமல் அங்கு விற்பனை செய்யப்படும் உணவு வகைகளும் தரமாக உள்ளதா என்பதில் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க
  வேண்டும். '' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  English summary
  Why do people like Shawarma:ஷவர்மாவை பொறுத்தவரை குறைந்த விலையில் அதிக புரதச் சத்துக்கள் அடங்கிருப்பதால் அதனை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதாக கூறுகிறார் அரேபிய உணவு வகை உணவக நிறுவனர் அப்துல் வாசிஹ்.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X