திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொன்னபடி செஞ்சது பாஜக! அதனால மோடியை எதிர்க்கல.. அய்யாக்கண்ணு பேட்டி

Google Oneindia Tamil News

திருச்சி: விவசாயிகளின் 6 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை பாரதிய ஜனதா ஏற்றுக் கொண்டதாலேயே மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை என்றும்; தாங்கள் விவசாயிகளுக்கு துரோகம் செய்யவில்லை என்றும் அய்யாக்கண்ணு விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியில் தமிழக விவசாயிகள் போட்டியிடுவார்கள் என தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு கடந்த மாதம் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக தலைமை தமிழக விவசாயிகளுக்கு என்ன பிரச்னை என்பதை விசாரிக்குமாறு பாஜக நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் அய்யாக்கண்ணு சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புக்கு பின்னர் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட மாட்டோம் என அய்யாக்கண்ணு அறிவித்தார்.

அவங்கள பாருங்க.. என்னையும் பாருங்க.. நீங்களே முடிவு பண்ணுங்க.. நாம் தமிழர் வேட்பாளர் பிரச்சாரம்அவங்கள பாருங்க.. என்னையும் பாருங்க.. நீங்களே முடிவு பண்ணுங்க.. நாம் தமிழர் வேட்பாளர் பிரச்சாரம்

அய்யாக்கண்ணு மறுப்பு

அய்யாக்கண்ணு மறுப்பு

இதனால் அய்யாக்கண்ணு மீது விமர்சனங்கள் எழுத்தன. பணம் வாங்கிக் கொண்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்வதாகவும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்தனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு எந்த துரோகமும் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் அய்யாக்கண்ணு.

141 நாள்கள் போராடினோம்

141 நாள்கள் போராடினோம்

நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "பாஜகவை எதிர்த்து 5 வருடங்களாக ஆதரவு தெரிவித்துவிட்டு, இன்று உடனே ஆதரவு தெரிவித்தது ஏன் என்று கேட்கிறீர்கள். நாங்கள் 141 நாள்கள போராடினோம். கண்டுகொள்ளவே இல்லை. இதனால் மோடியை எதிர்த்து வாரணாசியில் 111 விவசாயிகள் நிர்வணமாக ஊர்வலம் சென்று, பிச்சை எடுத்து அந்த காசில் வேட்பு மனு தாக்கல் செய்வதாக இருந்தோம்.

அழைத்தார் பியூஸ்

அழைத்தார் பியூஸ்

இந்த போராட்டம் குறித்து கேள்விபட்டு ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தொடர்பு கொண்டார். எங்களை பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்பு கொண்டார். உங்களுடைய கோரிக்கை என்ன என்பதை சொல்லுங்கள் என்றார்கள். மார்ச் மாதம் 12ம் தேதி எங்கள் கோரிக்கையை ஆங்கிலத்தில் மாற்றி அனுப்பினோம். இந்த கோரிக்கையை பெற்றுக்கொண்ட பியூஸ் கோயல், இங்கு வாருங்கள், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என்று அழைத்தார். அவருடன் அமைச்சர் தங்கமணி வந்தார். இதன்பின்னர் முரளி என்பவர் எங்களை டெல்லிக்கு அழைத்துச் சென்றார்.

கோரிக்கை ஏற்பு

கோரிக்கை ஏற்பு

காலை 11 மணி அளவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை பார்த்தோம். அவர் எங்களிம் உங்கள் கோரிக்கை என்ன என்று கேட்டார். அப்போது அவரிடம் நாங்கள் லாபகரமான விலை வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என 6 கோரிக்கைகளை சொன்னோம். அதற்கு அவர், கடன் தள்ளுபடியை தவிர, விவசாயப் பொருட்களுக்கு லாபகரமான விலை, விவசாயிகளுக்கு பென்சன் கொடுப்பது, நதிகளை இணைக்க ஆணையம் அமைப்பது,சிறுகுறு விவசாயிகளுக்கு உதவி செய்வது உள்ளிட்ட உங்களுடைய 6 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

பயந்து வழிக்கு வந்தது

பயந்து வழிக்கு வந்தது

எனவே எங்கள் கோரிக்கையை பாஜக ஏற்றுக்கொண்டதால் நாங்கள் போட்டியிட மாட்டோம் என ஒப்புக்கொண்டோம். சொன்னபடி 5 கோரிக்கைககளை தேர்தல் அறிக்கையில் பாஜக வெளியிட்டுள்ளது. கோரிக்கையை ஏற்றது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் யாருக்கும் அடிபணியவில்லை. நாங்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள் பாஜக பயந்தே வழிக்கு வந்துள்ளது" இவ்வாறு கூறினார்.

English summary
Ayyakannu says, bjp accept our five demands, thats why we did not contest in varanasi against PM modi in lok sabha polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X