திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த சர்காரை விடுங்க.. முதல்ல இந்த சர்க்காரை கவனிங்க.. கவுதமன் கொட்டு

மக்களுக்கு நல்லது செய்ய தமிழக அரசு முன் வேண்டும் என கவுதமன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன்- இயக்குநர் கெளதமன்- வீடியோ

    திருச்சி: தியேட்டரில் ஓடும் சர்க்கார் படத்தை விட்டுவிட்டு, ஆட்சியாளர்கள் கோட்டையில் நடைபெறும் சர்க்காரை நல்லா கவனித்தாலே போதும் என்று இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

    முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட கவுதமன் வந்திருந்தார். இதையொட்டி முக்கொம்பு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து. நுழைவு பகுதியில் இருந்து உள்ளே சென்ற இயக்குனர் கவுதமனுக்கு, சுற்றுலா மையத்தில் உள்ள பூங்கா பகுதி வரை மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

    ஆஹா.. ரஜினி என்ன சொல்றார்னு பார்த்தீங்களா.. இதை விட கிளியரா சொல்லவே முடியாது! ஆஹா.. ரஜினி என்ன சொல்றார்னு பார்த்தீங்களா.. இதை விட கிளியரா சொல்லவே முடியாது!

     அனுமதி மறுப்பு

    அனுமதி மறுப்பு

    கொள்ளிடம் பாலத்திற்கு செல்ல போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அணையை பார்வையிடாமல் திரும்பி சென்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு கவுதமன் பேட்டி அளித்தார். அப்போது அவர் சொன்னதாவது:

    கொள்ளை

    கொள்ளை

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல அணைகள் இன்னும் உறுதியாக இருக்கும்போது, முக்கொம்பு மேலணை மட்டும் உடைந்துவிட்டது. இதற்கு கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரிப் படுகை பகுதி முழுவதும் நடைபெற்ற மணல் கொள்ளைதான் காரணம்.

     தூர் வார வேண்டும்

    தூர் வார வேண்டும்

    இனியாவது மணலைத் திருடாமல் எங்கள் தலைமுறைக்கு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். இல்லையெனில் போராட்டம் நடைபெறும். அந்த போராட்டத்தை எதை கொண்டும் சமாளிக்க முடியாது. இன்னும் சில நாட்களில் நவம்பர் மாதத்தில் மழை பெய்யும். அப்போது மழை நீரை சேமிப்பது, ஏரி, குளங்களை உடனடியாக தூர் வார்வது என அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     சர்க்காரை விடுங்க

    சர்க்காரை விடுங்க

    சர்கார் திரைப்படத்தை கவனிப்பதைக் காட்டிலும் மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசு கவனிக்க வேண்டும். தியேட்டரில் ஓடும் சர்க்கார் படத்தை விட்டுவிட்டு, ஆட்சியாளர்கள் கோட்டையில் நடைபெறும் சர்க்காரை நல்லா கவனித்தாலே போதும்." இவ்வாறு கவுதமன் கூறினார்.

    English summary
    Without criticizing Sarkar, tn govt. should do better for people: Goudaman
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X