திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"லட்டு ராணி".. முந்தானையால் முகத்தை மூடி.. 25 வருஷமாவே இப்படித்தான்.. ஷாக் ஆன திருச்சி!

பயணிகளிடம் நகை பறித்த பெண் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

திருச்சி: "லட்டு ராணி".. சகலகலா கில்லாடி இவர்.. எத்தனையோ கொள்ளைகளை பார்த்திருந்தாலும், மயக்கியே கொள்ளை அடிப்பதுதான் ராணியின் ஸ்பெஷல்!

திருவையாறு ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி சண்முகம் - பார்வதி. திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்ப்பதால், அங்கேயே தங்கி உள்ளார்.. மாதமானால் பார்வதி ரெங்கநாதபுரம் வந்து போவார்.

அப்படித்தான் போன ஜுன் 27-ந்தேதி ரெங்கநாதபுரம் வந்துவிட்டு திரும்பவும் ஊருக்கு போக திருச்சி பஸ் ஸ்டாண்ட் வந்தார்.. அங்கு நின்று கொண்டீருந்த கோவை பஸ்ஸில் ஏறி கொண்டார்.

மெரீனா பீச்சில்.. தடையை மீறி அதகளம் செய்த எச். ராஜா.. கொந்தளித்த நெட்டிசன்கள்.. போலீஸ் வழக்குமெரீனா பீச்சில்.. தடையை மீறி அதகளம் செய்த எச். ராஜா.. கொந்தளித்த நெட்டிசன்கள்.. போலீஸ் வழக்கு

பிரசாதம்

பிரசாதம்

அப்போது, ஒரு பெண்ணும் அதே பஸ்ஸில் ஏறினார்.. 40 வயது இருக்கும்.. நேராக வந்து பார்வதி சீட்டில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். அவர் கையில் லட்டுகள் இருந்தன.. கோயிலுக்கு போய்விட்டு இப்பதான் வர்றேன்.. பிரசாதம் இது.. இந்தாங்க சாப்பிடுங்க.. என்று சொல்லி, ஒரு லட்டை சாப்பிட்டு கொண்டே இன்னொரு லட்டை பார்வதிக்கு தந்தார். லட்டை வாங்கி சாப்பிட்ட பார்வதி அடுத்த வினாடிகளில் மயங்கினார்.

முந்தானை

முந்தானை

உடனே தன் முந்தானையால் பார்வதியின் முகத்தை மூடிவிட்டார் அந்த பெண்.. பார்வதி மீது சாய்ந்து கொண்டே கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயின், வளையல்கள், மோதிரம் என கிட்டத்தட்ட எட்டரை பவுன் நகையை கொள்ளையடித்தார். பார்ப்பவர்கள் எல்லாருமே பார்வதி தூங்குகிறார் என நினைத்தனர்.. அடுத்து ஏதோ ஒரு ஸ்டாப்பிங் வரவும் கடகடவென இறங்கிவிட்டார் அந்த பெண்.

பல்லடம்

பல்லடம்

ஆனால் பஸ் ஸ்டாண்ட் வந்தும் பார்வதி கடைசி வரை எழவில்லை.. அதிர்ச்சியடைந்த கண்டக்டர் பார்வதியின் செல்போனை எடுத்து அதில் இருந்த நம்பருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.. பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்கு குடும்பத்தினர் பதறியபடி வந்தனர்... சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.. ஆனால் 3 நாட்கள் வரை பார்வதிக்கு மயக்கமே தெளியவில்லையாம்.. இதற்குபிறகுதான் நடந்த விவரத்தை பார்வதி சொன்னார்.. போலீசிலும் புகார் தந்தார். போலீசாரும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்ணை தேடி கொண்டிருந்தனர்.

சுற்றி வளைப்பு

சுற்றி வளைப்பு

இந்நிலையில் நேற்று பார்வதி வழக்கம்போல் சொந்த ஊர் கிளம்பி வந்தார்.. அதற்காக திருச்சி பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறும்போது, அதே பெண்ணை பார்த்தார்.. கையில் லட்டு.. நல்லவேளை கூடவே, கணவனும், மகனும் வந்ததால், விரைந்து சென்று அந்த பெண்ணை கப்பென பிடித்து கொண்டனர். ஆனாலும் அந்த பெண் அசரலையே.. பஸ் ஸ்டாண்டிலேயே கத்தி, கத்தி வாதம் செய்தார்.. அதற்குள் போலீசார் வந்துவிட்டனர்.. கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் அந்த பெண்ணை ஒப்படைக்கவும், விசாரணை ஆரம்பமானது.

நாமக்கல்

நாமக்கல்

அவரது பெயர் ராணி.. வயசு 40.. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர்.. கணவன்பெயர் சுப்பிரமணி.. இப்படி திருடுவது ஏதோ சந்தர்ப்ப சூழலுக்காக இல்லை.. 25 வருஷமாக அதாவது கால் நூற்றாண்டாக இதே திருட்டுதான்.. பிரதான இடம் பஸ் ஸ்டாண்டுகள்தான்.. இதே லட்டுகள்தான்!! கையில் ஒரு நகை கட்டர் வைத்திருப்பாராம்.. 15 பவுன் எடை கொண்ட நகையாக இருந்தாலும், இந்த கட்டரை வைத்து ஈஸியாக கட் பண்ணி எடுத்துடுவாராம் ராணி.. எத்தனை பேர் இதுவரை இந்த மயக்க லட்டு சாப்பிட்டு பாதிக்கப்பட்டனர் என தெரியவில்லை.. இனிதானி விசாரிக்க வேண்டும்.

நகை கட்டர்

நகை கட்டர்

இப்போதைக்கு மயக்க லட்டுகள், நகை கட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவருக்கு பரமேஸ்வரன் என்பவர் துணையாம்.. அவர் இப்போது மாயமாகி உள்ளதால், தேடி வருகிறார்கள். 3 நாள் மயக்கம் தெளியாத அளவுக்கு அந்த மயக்க லட்டில் அப்படி என்னதான் மருந்து கலந்துள்ளது என்பது தெரியவில்லை.. அதனால் அந்த லட்டுக்களை டெஸ்ட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

English summary
40 year old woman arrested for looted jewelly in the running bus near trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X