• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஐந்து சிறுமிக்கு ஆபாச படம் காட்டி அசிங்கம் செய்த கயவன்- போக்சோவில் கைது

|

திருச்சி: நடனப்பள்ளிக்கு வந்த சிறுமியுடம் செல்போனில் ஆபாச படம் காட்டி அசிங்கமாக நடந்து கொண்ட இளைஞனை திருச்சி மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சரவணக்குமார் என்பதாகும், 19 வயதாகும் அந்த நபர் மலைக்கோட்டை இபி ரோட்டைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகனாவார். 5 வயது சிறுமிக்கு ஆபாச படத்தைக் காட்டி இளம் மொட்டை கசக்கி முகந்திருக்கிறான். இதுபோன்ற காம வெறியர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இளம் பிஞ்சுகள் முதல் மூத்த குடிமக்கள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல்தான் இருக்கிறது. பள்ளிகள், விடுதிகள், சினிமா தியேட்டர்களில் பாலியல் துன்புறுத்தல் அதிகமாகியுள்ள நிலையில் ரிலாக்ஸ்ஆக நடனம் கற்றுக்கொள்ள போன இடத்திலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

நடனம் கற்றுக்கொண்ட சிறுமி

நடனம் கற்றுக்கொண்ட சிறுமி

பாதிக்கப்பட்ட சிறுமி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே வசிக்கும் ஒரு தம்பதியினரின் மகளாவார். 5 வயதாகும் அந்த சிறுமிக்கு நடனம் என்றால் அதிக ஆசை, எனவே அருகில் உள்ள நடனப்பள்ளியில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை நடனம் கற்றுக்கொண்டு வந்தார். தினசரியும் சிறுமியை வகுப்பில் கொண்டு போய் விட்டு விட்டு முடிந்த உடன் அவரது அம்மா அழைத்துக்கொண்டு வருவார்.

நடனமாஸ்டர்

நடனமாஸ்டர்

அதே நடன வகுப்பில் சரவணக்குமாரும் நடனம் கற்றுக்கொள்ள சேர்ந்துள்ளார். சில நேரங்களில் சிறுவர் சிறுமியர்களுக்கு சரவணக்குமாரே நடனம் கற்றுக்கொடுப்பாராம். அப்போது சிறுமிகளிடம் பாலியல் ரீதியான சீண்டல்களை செய்துள்ளார். நடனத்தில் தொட்டு ஆடுவதை சிறுமியர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அத்து மீறிய கயவன்

அத்து மீறிய கயவன்

சிறுமியின் அம்மா கடந்த இரு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல நடனப்பள்ளிக்கு அழைத்துக் கொண்டு வந்தார் வகுப்பு முடிய இரண்டு மணிநேரம் ஆகும் என்பதால் வீட்டிற்கு சென்று விட்டார். அன்றைய தினம் சரவணக்குமார்தான் நடனம் கற்றுக்கொடுத்திருக்கிறார். மாணவிகள் அனைவரும் வகுப்பு முடிந்து வெளியே சென்று விடவே சிறுமி மட்டுமே தனியாக அம்மாவிற்காக காத்துக்கொண்டு இருந்துள்ளார். அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவன் செல்போனில் ஆபாசப்படத்தை சிறுமிக்கு காட்டியுள்ளான்.

சிறுமியிடம் அத்துமீறல்

சிறுமியிடம் அத்துமீறல்

தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக சீண்டலை தொடங்கியதோடு ஒரு கட்டத்தில் அசிங்கமாக நடந்து கொண்டான். இதில் சிறுமி சோர்வடைந்தார். குழந்தையின் நிலையைப் பார்த்து பதறிப்போன தாயார், நடந்ததை கேட்டார். அப்போது சிறுமி நடந்ததைக்கூறி அழவே, உடனடியாக அக்கம் பக்கத்தினருடன் நடனப்பள்ளிக்கு சென்று அங்கிருந்த சரவணக்குமாரை அடித்து உதைத்தனர். திருச்சி கோட்டை அனைத்து மகளில் காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.

போக்சோ சட்டம் பாய்ந்தது

போக்சோ சட்டம் பாய்ந்தது

சரவணக்குமாரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். திருச்சி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். நடனம் கற்றுக்கொள்ள நம்பிக்கையோடு விட்டு விட்டு போன குழந்தையை சீரழித்த கயவனுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
A youth name Saravanakumar was arrested woman police for allegedly molesting a minor girl in Trichy. The accused was booked under POCSO Act and produced in court.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more