• search
தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தூத்துக்குடி அருகே.. தோண்ட தோண்ட பிரமிப்பு.. ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழி.. தமிழ் பிராமி எழுத்து

Google Oneindia Tamil News

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி, ஆதிச்சநல்லூர், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும், கடலோரப்பகுதியான, கொற்கையில் முதல் கட்ட அகழாய்வு பணியும் துவங்கியது.

இந்த பணியானது தொடர்ந்து 4 மாத காலமாக நடைபெற்று வருகிறது.

2011லயே முருகதாஸ் சொன்னத.. இப்பத்தான் ஆராய்ச்சி பண்ணி நீங்க கண்டுபிடிக்கிறீங்களா?2011லயே முருகதாஸ் சொன்னத.. இப்பத்தான் ஆராய்ச்சி பண்ணி நீங்க கண்டுபிடிக்கிறீங்களா?

40 பணியாளர்கள்

40 பணியாளர்கள்

அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில், சிவகளை அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணிக்காக 15க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டு 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவகளை அகழாய்வு பணியை பொறுத்தவரை 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

சிவகளை பகுதியில் ஆய்வு

சிவகளை பகுதியில் ஆய்வு

இந்தநிலையில் சிவகளை பரம்பு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முதுமக்கள் தாழிகளில் 5 முதுமக்கள் தாழிகள் மூடியுடன் உள்ளது. 10 முதுமக்கள் தாழிகள் பெரிய அளவில் பிரம்மாண்டமாக உள்ளது.

தமிழ் பிராமி எழுத்துக்கள்

தமிழ் பிராமி எழுத்துக்கள்

ஒவ்வொரு முதுமக்கள் தாழிகளும் 2 அடி முதல் 4 அடி வரை உயரமாக காணப்படுகிறது. மேலும் பானைகளும், பானை ஓடுகளும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த திருப்பத்தின் காரணமாக ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வாழ்விடப் பகுதிகள் குறித்து ஆய்வு

வாழ்விடப் பகுதிகள் குறித்து ஆய்வு

சிவகளை அகழாய்வு பணியில் தாமிரபரணிக்கரை நாகரீகத்தை கண்டறிவதற்காக முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளையும் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அகழாய்வு அதிகாரிகளும், ஆர்வலர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

முதுமக்கள் தாழி என்றால் என்ன?

முதுமக்கள் தாழி என்றால் என்ன?

முந்தைய காலத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள் முதுமக்கள் தாழிகள் எனப்படும். ‘தாழியுடன் கவிப்போர்' என மணிமேகலை இவ்வழக்கம் குறித்து சுட்டிக் காட்டுகிறது. முதுமக்கள் தாழி அரை அடி முதல் ஏழு அடி வரையிலான பல்வேறு அளவுகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆற்றுச் சமவெளிப்பகுதிகளில் இம்முறை பரவாலாக பின்பற்றப்பட்டு வந்ததை தொல்லியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன.

English summary
In Thoothukudi district, 16 muthumakkal thali have been found in a single pit in Sivakalai. On behalf of the Tamil Nadu Archaeological Survey, the second phase of excavations began on February 26 at Adichanallur, Sivakalai and the first phase at Korkai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X