தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருமகள் லேப் டெக்னிஷியன்.. அவர் வாயிலாக பரவிய கொரோனா.. தூத்துக்குடியில் பெண்மணி பரிதாப பலி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: கொரோனா நோய் தொற்று காரணமாக 71 வயது மூதாட்டி தூத்துக்குடியில் இன்று உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் எப்படி அடக்கம் செய்யப்படுகிறது தெரியுமா?

    தூத்துக்குடியை சேர்ந்தவர் ஒரு பெண்மணி, லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். அப்போது கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. பிறகு, இவரது மாமியார் அந்தோணியம்மாள் (71) அந்த தொற்றுக்கு உள்ளானார். லேப் டெக்னிஷியனின் கணவருக்கும் கொரோனா தொற்றியுள்ளது.

    71 year old lady admitted for coronavirus treatment in Tuticorin death

    கடந்த செவ்வாய்க்கிழமை இவருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. பின்னர் வீட்டை சேர்ந்த அனைவருக்கும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். அதில் மூதாட்டிக்கு நேற்று முதல் உடல்நிலை மோசமானதால் வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார்.

    இந்தியாவில் கொரோனா கொத்துக்கொத்தாக பாதிப்பு.. சமூக பரவல் அல்ல.. உலக சுகாதார அமைப்பு விளக்கம் இந்தியாவில் கொரோனா கொத்துக்கொத்தாக பாதிப்பு.. சமூக பரவல் அல்ல.. உலக சுகாதார அமைப்பு விளக்கம்

    இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    71 year old lady who has been admitted for coronavirus treatment in Tuticorin has been declared death on today Hare sister-in-law was working with laboratory from there the whole family e got infection says doctors.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X