தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு.. தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தை அடுத்து தூத்துக்குடியில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ் (56). இவரது மகன் பென்னிக்ஸ் (31). கடந்த 19-ஆம் தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடை நடத்தியதாக இவர்கள் மீது கோவில்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

80 percentage shops in Tuticorin closed today

இதையடுத்து இருவரையும் விசாரணை கைதியாக இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். இந்த உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று பெரும்பாலான கடைகள் இயங்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

விஸ்வரூபமெடுக்கிறது.. கோவில்பட்டி தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்..இன்றே விசாரிக்கிறது மதுரை ஹைகோர்ட்விஸ்வரூபமெடுக்கிறது.. கோவில்பட்டி தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்..இன்றே விசாரிக்கிறது மதுரை ஹைகோர்ட்

இதுகுறித்து வணிகர் சங்கத்தினர் கூறுகையில் சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையில் இருந்த போது மர்மமான முறையில் பலியான இருவரது குடும்பத்திற்கு ரூ 2 கோடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

English summary
80 percentage of shops in Tuticorin were shut down against mysterious death of Sathankulam father and son.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X