தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு 57 வயது.. இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லைக்கு போவேன்.. கார்த்திக்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: எனக்கு 57 வயதாகிறது. இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லைக்கு போய் நிற்பேன் என நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகரும் மக்கள் உரிமை காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

அவர் கூறுகையில் நான் பைலட் ஆகி ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது எனது முதல் ஆசையாக இருந்தது. தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்.டி.ஏ) பயிற்சி பெற நினைத்தேன். ஆனால் நடிகராகிவிட்டேன்.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்... அரசாணை இன்னும் கிடைக்கவில்லை... சிபிஐ தகவல்பொள்ளாச்சி பாலியல் கொடூரம்... அரசாணை இன்னும் கிடைக்கவில்லை... சிபிஐ தகவல்

உளவுத்துறை

உளவுத்துறை

இருப்பினும் இன்று என்.டி.ஏ. கூட்டணியில்தான் சேர்ந்துள்ளேன். உங்கள் வரவேற்பினை பார்க்கும்போது சரியான முடிவை தான் எடுத்து உள்ளேன் என்பது தெரிகிறது. ராணுவம் எப்படி எல்லையில் நமக்கு பாதுகாப்பு கொடுக்கிறதோ அது போன்று காவல்துறை, உளவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது.

குழப்ப முயற்சி

குழப்ப முயற்சி

உங்களின் வாக்குரிமை பற்றி உங்களுக்கு நல்லா தெரியும். நாடு நல்லா இருக்க வேண்டும். வீடு நல்லா இருக்க வேண்டும். மக்கள் நல்லா இருக்க வேண்டும். பலர் உங்களை குழப்ப முயற்சி செய்கின்றனர்.

பாஜக வெற்றி பெறும்

பாஜக வெற்றி பெறும்

குறிப்பாக எதிர்க்கட்சியினர் மக்களை குழப்பி வாக்கு பெற முயற்சிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தான் நமது தமிழகம் நன்றாக இருக்கும். இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். 99.99 சதவீதம் பாஜக வெற்றி பெறும்.

100 சதவீதம் பாஜக வெற்றி

100 சதவீதம் பாஜக வெற்றி

மீண்டும் மோடி பிரதமராக வருவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.100 சதவீதம் பா.ஜ.க. வெற்றி பெறும். வேறு யாராவது வந்தால் மக்கள் கஷ்டப்படும் நிலை வந்து விடும்.

தேசப்பற்று

தேசப்பற்று

இந்த தொகுதியில் நிற்கும் தமிழிசை செளந்தராஜன் என்பது நல்ல பெயர் மட்டுமல்ல நல்ல பெண்மணி, தேசத்தின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நாகரீகம், பண்பாடு, தேசப்பற்று குறித்து கற்று தர வேண்டும்.

பாடல்

பாடல்

யார் என்று தெரியாமல் கேள்விக்குறியுடன் உள்ள கூட்டணிக்கு வாக்களித்தால், நமது வாக்கு வீணாகிவிடும். இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லையில் போய் நான் நிற்பேன் என்றார் கார்த்திக். இதையடுத்து மக்கள் கேட்டதற்கிணங்க வெத்தல போட்ட சோக்குல பாடலை பாடினார்.

English summary
Actor Karthik says that inspite he is 57 yeard old, he is ready to LoC with gun if needed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X