தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதற்கெடுத்தாலும் சந்தியா மீது சந்தேகம்.. பாத்ரூம் வரை சிசிடிவி கேமரா.. சித்தி குமுறல்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஈவு இரக்கமின்றி மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை வீசிய சம்பவத்தில் கணவர் பாலகிருஷ்ணனுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஞாலம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் பிரசன்ன குமாரி என்பவரது மகளான சந்தியா என்பது தெரிய வந்துள்ளது.

சந்தியா அழகாக இருப்பதால் அவர் மீது பாலகிருஷ்ணனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. அவரை யாராவது பார்த்தால் கூட பிரச்சினை செய்யும் மனப்பக்குவம் கொண்டவராம். தான் வெளியே கிளம்பிவிட்டால் மனைவி யாருடனாவது தகாத உறவு கொள்ளலாம் என்பதால் குளியல் அறை வரை பாலகிருஷ்ணன் சிசிடிவி கேமராவை பொருத்தி சந்தியாவை கண்காணித்துள்ளார்.

சந்தியா

சந்தியா

16 வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட சந்தியா, சில வருடங்களிலேயே கணவரின் தாக்குதலுக்கு ஆளானதும் சினிமா துறையில் கால் பதித்த பின்னர் பாலகிஷ்ணனுக்கு சந்தியா மீதுள்ள சந்தேகம் அதிகரித்ததால் பாலகிருஷ்ணனிடம் இருந்து விவாகரத்து வாங்க சந்தியா நடவடிக்கை எடுத்து வந்துள்ளார்.

கண்ணீர் மல்க பேட்டி

கண்ணீர் மல்க பேட்டி

இதுகுறித்து விஜிஷா (சந்தியாவின் தங்கை, சித்தி மகள் ) கூறுகையில் அடிக்கடி சந்தியாவை கொலை செய்து விடுவேன் என கூறிய பால கிருஷ்ணன் மிரட்டிய நிலையில் அவர் கூறியதை போலவே சந்தியாவை கொலை செய்ததாக சந்தியாவின் உறவினர்கள் கண்ணீர் மல்க குற்றம்சாட்டினர்.

அதிகபட்ச தண்டனை

அதிகபட்ச தண்டனை

சந்தியாவை பிடிக்கவில்லை என்றால் தங்களிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும். அதனை விட்டு விட்டு கொடூரமாக கொலை செய்த பாலகிருஷ்ணனுக்கு அரசும் நீதிமன்றமும் அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

வெளிநாடு சென்றதாக பொய்

வெளிநாடு சென்றதாக பொய்

கடந்த 15 நாட்களாக சந்தியாவை தொடர்பு கொள்ள முடியாததால் பாலகிருஷ்ணனிடம் விசாரித்த போது அவர் வெளிநாடு சென்று இருப்பதாக தெரிவித்தார். காவல்துறையின் நடவடிக்கையால்தான் தங்கள் மகள் கொலை செய்யப்பட்ட விபரம் தெரிய வந்ததாகவும் இல்லை என்றால் வெளிநாட்டில் தங்கள் மகள் இருப்பதாகவே நினைத்து இருப்போம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

English summary
Balakrishnan suspects Sandhya in all aspects. He has installed CCTV even in Bathroom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X