தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டயர் வெடித்து.. பேரிகாட்டை உடைத்து.. லாரியில் மோதி நசுங்கிய கார்.. ஒருவர் பலி.. அருப்புக்கோட்டையில்!

கார் விபத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியை பலியானார்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: நடுரோட்டில் கார் டயர் வெடித்து சிதறி.. தாறுமாறாக தறிகெட்டு ஓடி.. எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது மோதி நசுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.. தீவிர சிகிச்சையில் உள்ள அவரது கணவன் உயிருக்கு போராடி வருகிறார்.

மதுரையைச் சேர்ந்த தம்பதி ஞானராஜ் - ஜோஸ்மின்மேரி... இருவரும் கோயிலுக்கு செல்வதற்காக காரில் மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி சென்றனர்... ஞானராஜ்தான் காரை ஓட்டி சென்றார்.. மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

car accident and one died near aruppukkotai

அருப்புக்கோட்டை அருகே வந்துபோது, பாளையம்பட்டி விலக்கில் இவர்களது காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்தது. இதில், கார் நிலைதடுமாறி தறிகெட்டு ஓடியது.. எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும், அவரால் காரை ஒரு கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

அதனால் கார், நான்கு வழிச்சாலையின் நடுவே உள்ள பேரிகாட்டில் மோதி... மறுபக்க சாலைக்கு சென்று... அங்கு வந்து கொண்டிருந்த ஒரு கன்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது. இதில் அப்பளம் போல் நொறுங்கிவிட்டதில், காரில் இருந்த தம்பதி பலத்த காயம் அடைந்தனர்.. தகவலறிந்து போலீசார் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் உடனடியாக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

டூ-பீஸில் துள்ளலாக வந்த பெண்.. தடை போட்ட போலீஸ்.. டிரஸ் போட்டுக்கவே முடியாது என அடம்!டூ-பீஸில் துள்ளலாக வந்த பெண்.. தடை போட்ட போலீஸ்.. டிரஸ் போட்டுக்கவே முடியாது என அடம்!

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜோஸ்மின் மேரி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்... ஜோஸ்மின்மேரி ஓய்வுபெற்ற காலேஜ் புரொபஸர் ஆவார்.. ஞானராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த அருப்புக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

English summary
car hit on container lorry and one died near aruppukkotai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X