தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கங்கைகொண்டான் சென்ற ஸ்ரீதர்.. வழிமறித்து தூக்கிய சிபிசிஐடி.. விசாரணை முடிவில் அதிரடி கைது

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் அவர் திடீரென கைது செய்யப்பட்டார். தந்தை மகன் கொலை வழக்கில் ஸ்ரீதர் 5ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

Recommended Video

    தந்தை மகன் சித்ரவதை கொலையில் தொடர்புடைய போலீஸார்கள் அடுத்தடுத்து கைது

    சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது போல் எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள், ஏஎஸ்பி, டிஎஸ்பி, எஸ்பி என அனைவர் மீது சஸ்பெண்ட் அல்லது காத்திருப்பு பட்டியலில் வைப்பது என நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    CBCID enquires Sathankulam Inspector Sridhar

    உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு காவல் நிலையத்தில் இதுபோன்ற சித்ரவதை நடந்ததை இன்ஸ்பெக்டர் தடுக்காமல் இருந்தது ஏன் என கேள்வி எழுந்தது.

    இதனிடையே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். எனினும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பது பெருவாரியானோரின் கோரிக்கையாக இருந்தது.

    எஸ்ஐ ரகுகணேஷ் கைது சரி!.. சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்யாமல் விட்டது ஏன்?.. கனிமொழி எஸ்ஐ ரகுகணேஷ் கைது சரி!.. சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்யாமல் விட்டது ஏன்?.. கனிமொழி

    இந்த நிலையில் ஸ்ரீதரை, கங்கைகொண்டான் செல்லும் வழியில் சிபிசிஐடி போலீஸார் வழிமறித்தனர். பின்னர் ஸ்ரீதரை தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சாத்தான்குளம் காவல் நிலைய அலுவலர் என்ற முறையில் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். அவர் இந்த வழக்கில் 5ஆவது நபராக சேர்க்கப்பட்டார். இன்று பலர் கைதாக வாய்ப்பு என சிபிசிஐடி ஐஜி சங்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    CBCID enquires Sathankulam Inspector Sridhar in Custodial death of Jayaraj and Bennicks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X