தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம் வழக்கு.. சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதி.. 3 காவலர்களுக்கு ஆக.5 வரை சிறை

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் காவலர்களிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதியானதால் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் இருவரும் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவரும் போலீஸாரால் மிக கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.

CBI officer has tested corona positive

இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட 10 பேரில் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, சாமதுரை ஆகிய 3 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்த சிபிஐ இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது.

பொலிவியாவில் பயங்கரம்.. கொரோனா சமூகப் பரவலின் கோரம்.. வீடுகள், தெருக்களில் கிடந்த 400 சடலங்கள்! பொலிவியாவில் பயங்கரம்.. கொரோனா சமூகப் பரவலின் கோரம்.. வீடுகள், தெருக்களில் கிடந்த 400 சடலங்கள்!

இவர்களது காவல் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் சாத்தான்குளம் வழக்கில் காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதியானது.

இதையடுத்து அவர்களது சிபிஐ காவல் நாளை முடிவடையவுள்ள நிலையில் இன்றே அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மூன்று பேரையும் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொலிவியாவில் பயங்கரம்.. கொரோனா சமூகப் பரவலின் கோரம்.. வீடுகள், தெருக்களில் கிடந்த 400 சடலங்கள்!

English summary
CBI officer has tested corona positive who is in the team of interrogating Sathankulam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X