தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இவர்தான்டா முதல்வர்".. ஜஸ்ட் ரெண்டு மணி நேரம்தான்.. தெறிக்க விட்ட எடப்பாடியார்!

மாற்று திறனாளி பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: முதல்வரின் கார் வரும்போது, சாலையோரத்தில் நின்றிருந்தார் மாரீஸ்வரி என்ற மாற்றுதிறனாளி பெண்.. ஆனால், தன்னுடைய கோரிக்கையை வெறும் 2 மணி நேரத்தில் முதல்வர் நிறைவேற்றி வைப்பார் என்று மாரீஸ்வரி கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரீஸ்வரி.. 28 வயதாகிறது.. இவர் ஒரு மாற்று திறனாளி பெண்.. கடுமையான முயற்சியால் எம்ஏ படித்திருக்கிறார்.

 CM Edapadi Palanisamy work order for a disabled woman

இந்நிலையில், இன்று முதல்வர் தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.. அரசு மருத்துவமனையில் நவீன கருவியை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் வந்தார்.. அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மறுபடியும் காரில் திரும்பி கொண்டிருந்தார் முதல்வர்.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே முதல்வரின் கார் வந்து கொண்டிருந்தது.. அப்போது ரோட்டோரத்தில் மாரீஸ்வரி இருந்தார்.. அவரை அவரது அப்பா தூக்கி வைத்து கொண்டிருந்தார்.. கையில் ஒரு மனுவையும் மாரீஸ்வரி வைத்திருந்தார்.

மாரீஸ்வரியை பார்த்ததுமே காரை நிறுத்திவிட்டார் முதல்வர்.. அவரிடம் சென்று என்ன என்று விசாரிக்கவும், வேலைக்காக மாரீஸ்வரி முயற்சித்து வந்தது தெரியவந்தது.. கையில் உள்ள மனுவையும் முதல்வரிடம் தந்து அரசு வேலை வேண்டும் என்று மாரீஸ்வரி கேட்டார்.

அந்த மனுவை முதல்வர் பெற்று கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி சொன்னார்.. அதுமட்டுமல்ல, மனுவை பெற்றுக் கொண்டு, அடுத்த 2 மணி நேரத்துக்குள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வார்டு மேலாளர் வேலைக்கான பணியை வழங்க நடவடிக்கையும் எடுத்தார்.. அந்த பணி நியமன ஆர்டரையும் மாரீஸ்வரிக்கு வழங்கினார் முதல்வர்.

நிதீஷின் முதல்வர் கனவில் விழுந்த மண்.. பழி வாங்கிய சிராக் பஸ்வான் நிதீஷின் முதல்வர் கனவில் விழுந்த மண்.. பழி வாங்கிய சிராக் பஸ்வான்

2 மணி நேரத்தில் வேலை கிடைத்ததை நினைத்து மாரீஸ்வரி ஆனந்தத்தில் கண்ணீர் சிந்தினார்.. முதல்வருக்கு நன்றியையும் தெரிவித்தார்.. இனிமேல் மாரீஸ்வரிக்கு மாசம் 15 ஆயிரம் கிடைக்க போகிறது!
எப்போதுமே முதல்வர் வெளியூர்களுக்கு செல்லும்போதெல்லாம் அவரை வரவேற்க மக்கள் திரண்டு நிற்பார்கள்.. அந்த வரவேற்பை ஏற்று கொள்வது முதல்வரின் வழக்கம்.

சில சமயம் காரை விட்டு இறங்கி அவர்களிடம் சென்று பேசிவிட்டும் வருவார்.. எல்லாரையும் மாஸ்க் போடும்படி வலியுறுத்திவிட்டும் செல்வார்.. ஆனால், இந்த முறை சாலையோரத்தில் நின்றிருந்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்காக, வெறும் ரெண்டே மணி நேரத்தில் வேலை வழங்கியதை நினைத்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.

English summary
CM Edapadi Palanisamy work order for a disabled woman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X