தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்கோர் செய்த எடப்பாடியார்.. கோவில்பட்டியில் விவசாயிகளையும் நெசவாளர்களையும் மகிழ்வித்த முதல்வர்!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்துக்கு வருகை தந்து விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

Recommended Video

    ஸ்கோர் செய்த எடப்பாடியார்.. கோவில்பட்டியில் விவசாயிகளையும் நெசவாளர்களை மகிழ்வித்த முதல்வர்!

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிசேரி கிராமத்தில் பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசுகையில் விவசாயிகளையும் ரவுடியையும் ஒப்பிட்டு ஸ்டாலின் பேசுவது வேதனை அளிக்கிறது. வயலில் வேலை செய்பவர்களுக்குதான் விவசாயிகளின் கஷ்டம் தெரியும். ரவுடியாக ஸ்டாலின் இருப்பதால் ரவுடி என அவரை பேசுகிறார். விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாக ஸ்டாலின் பேசுவதை இனியாவது நிறுத்தி கொள்ளவேண்டும் என விவசாயியாக விவசாயிகளின் சார்பில் அன்போடு நான் கேட்டு கொள்கிறேன்.

    புதிய திட்டங்கள்

    புதிய திட்டங்கள்

    விவசாயிகளிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பும் திட்டத்தை எதிர்காலத்தில் செய்ய இருக்கிறோம். இந்த அரசு மக்களைக் காக்கும் அரசு, ஏழை மக்களை காக்க புதிய திட்டங்களை கொண்டு வரும் அரசு. வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள் என தெரிவித்தார்.

    உரை

    உரை

    அது போல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டையபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நெசவாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தமிழக அரசின் நெசவாளர்களுக்கு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.

    யார் யார் பங்கேற்பு

    யார் யார் பங்கேற்பு

    இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
    கடம்பூர் ராஜு முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், முன்னாள் எம்எல்ஏ மோகன் நகர செயலாளர் ஆழ்வார் உதயகுமார் புதூர் செல்வராஜ்
    உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெசவாளர்கள்

    நெசவாளர்கள்

    அப்போது முதல்வர் எடப்பாடி பேசுகையில் இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டி தந்ததும், விலையில்லாமல் 200 யூனிட் மின்சாரம் வழங்கியதும் இந்த அரசு தான். பட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 67 கோடி ரூபாய் வழங்கியது இந்த அரசு தான். இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு பசுமைவீடு கட்டி கொடுத்தது அதிமுக அரசு.

    நிவாரணம்

    நிவாரணம்

    கொரனா காலத்தில் பொருளாதரம் இழந்த நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மாணியம் 150 கோடியில் இருந்து 300 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். பிரதம மந்திரி திட்டத்தின் முத்ரா கடன் நெசவாளர்கள் 70 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேல் காலமாகும் நெசவாளர்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றார் அவர்.

    English summary
    CM Edappadi Palanisamy meets Farmers and weavers in Kovilpatti and campaigned there.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X