தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலக்கரி தட்டுப்பாடு...தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்களில் உற்பத்தி நிறுத்தம்

நிலக்கரி தட்டுப்பாட்டால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: நிலக்கரி தட்டுப்பாட்டால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 3 யூனிட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மின் வெட்டு பிரச்சனை நிலவி வருகிறது.

Coal shortage Production stop at 3 units at Thoothukudi Thermal Power Station

நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 100-ல் மிகவும் குறைவான அளவில் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகள் மூலம் தலா 210 மெகாவாட் விதம், 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலமாக நிலக்கரி கொண்டுவரப்பட்டு 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1, 3, 5-ஆகிய யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 3 யூனிட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனல் மின் நிலையத்தில் உள்ள 2 யூனிட்டுகள் மூலம் 420 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

Recommended Video

    India-வில் திடீரென நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட காரணம் என்ன?

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின் வெட்டு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால் மின்வெட்டு பிரச்சினை அதிகரிக்கும் என்ற அபாயம் எழுந்துள்ளது.

    English summary
    Power generation at 3 units at Thoothukudi Thermal Power Station has been suspended due to shortage of coal. The 630 MW of power generated in these 3 units has been affected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X